பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t 06 ஆத்மாவின் ராகங்கள்

'மேலே போய் இருங்க, தம் பீ மங்கம் மாக் கிழவி

கூப்பிடும். மதுரத்தைப் போல அதுக்குச் சுவரேறி வரத்

தெரியாது. பலகாரம் ஆறிப்போகும்...'

அவன் மறுபடி பத்தரைப் பார்த்துச் சிரித்தான்.

'என்ன சிரிக்கிறீங்க?"

'நீர் ரொம்ப சாமார்த்தியமாகப் பேசறதா நினைச்சுப் பேசறதைப் பார்த்துத்தான் சிரிச்சேன் பத்தரே?"

இந்தச் சமயத்தில் மேலே படித்துக் கொண்டிருந்தவர்கள் கீழிறங்கி வந்தனர். பத்தர் சிவப்பு லேஸ்தாள்களில் நகைகளை மடித்துக் கொடுத்தார். அவர்கள் வாங்கிக் கொண்டு பணத்தைக் கொடுத்துவிட்டுப் போனார்கள். கைகளைக் கழுவிவிட்டுக் கடையைப் பூட்டிக் கொண்டு அவரும் அவனோடு மேலே மாடிக்கு வந்தார். மங்கம்மாக் கிழவி கொடுத்த தோசைகளை எப்படியோ பத்தர் மறுக்காமல் ராஜாராமனைச் சாப்பிடச் செய்துவிட்டார். அவரும் அங்கேயே தோசை சாப்பிட்டார்.

'புடவையைக் கார்த்தாலே குடுத்துடலாம் தம்பீ'

"இங்கேயே வச்சிருக்கேன்? நீங்களே கடை திறக்க வர்றப்ப எடுத்துக் கொடுத்திடுங்க-'

"ஏன் தம்பி 9'

"நான் கார்த்தாலே மேலுர் போறேன்...'

'போனா என்ன? திரும்பி வந்தப்புறம் நீங்களே உங்க கையாலே குடுங்க தம்பி அது ரொம்பச் சந்தோஷப்படும்'

ராஜாராமன் இப்போதும் ஏதோ பேச வாயெடுத்தவன், பேசாமலே அடக்கிக் கொண்டு விட்டான். பத்தர் தயங்கித் தயங்கிச் சொல்லிக் கொண்டு புறப்பட்டார். அவனுக்கு உறக்கம் வரவில்லை. யோசித்துக் கொண்டே