பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 107 உட்கார்ந்திருந்தவன், திடீரென்று நினைத்துக் கொண்டு நாற்காலியை மேஜையருகே நெருங்கிப் போட்டுக் கொண்டு பிருகதீஸ்வரனுக்குக் கடிதம் எழுதலானான். அன்று காலை கதர் விற்கப் போனது, மாகாண மகாநாட்டு ஏற்பாடுகள், ஊர்வலப் பொறுப்பு, சத்தியமூர்த்தி மதுரை வரப்போவது, எல்லாவற்றையும் பற்றி அவருக்கு எழுதினான். முடிந்தால் மகாநாட்டின் போது அவரை மதுரை வர வேண்டியிருந்தான் கடிதத்தில். கடிதத்தை உறையிலிட்டுக் கோந்து பாட்டிலைத் தேடி எடுத்து ஒட்டியும் ஆயிற்று. மேலுார் வீட்டு வாடகையை இனிமேல் வாசகசாலை விலாசத்துக்குக் கொண்டு வந்து கொடுக்கவோ, மணி ஆர்டர் செய்யவோ வேண்டும் என்று உரக் கம்பெனிக்கும் ஒரு கடிதம் எழுத வேண்டியிருந்தது. அதையும் எழுதி முடித்தபோது ஃபண்டாபீஸ் மணி பன்னிரண்டு அடித்தது.

விளக்கை அனைத்துவிட்டுப் படுத்தான் ராஜாராமன். 'நாளைக்குத்தான் மேலுார் போகிறேன் உரக் கம்பெனிக்குக் கடிதம் எதுக்கு?’

மேலுராவது, நாளைக்குப் போகிறதாவது? ஒரு கோபத்தில் பத்தரிடம் அப்படிக் கூறியாயிற்று. நாளையும் அடுத்த சில நாட்களும் மாகாணக் காங்கிரஸ் மகாநாட்டு வேலைகள் நிறைய இருக்கு. நாளும் நெருங்கிவிட்டது.

- 'பத்தரிடம் அப்படி ஏன் ஒரு பொய் சொன்னோம்?" என்றெண்ணியபோது, அப்படிப் பொய் சொல்லியிருக்கக் கூடாதென்றே தோன்றியது. ரொம்ப நேரமாகத் துரக்கம் முழுமையாக வரவில்லை. அரைகுறைத் தூக்கமும், நினைவுகளுமாக அவன் தவித்துக் கொண்டிருந்தான். புரண்டு புரண்டு படுத்தான். ‘. . - .

இலேசாகத் தூக்கம் கண்களைத் தழுவியபோது ஃபண்டாபீஸ் மணி ஒன்றடித்து ஒய்ந்தது. புரண்டு படுத்த ராஜாராமன், பாதங்களில் மிருதுவாக ஏதோ படுவது போல் உணர்ந்து வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தான்.