பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 ஆத்மாவின் ராகங்கள் என்று நடுநடுவே நினைவு வரும் போதெல்லாம் காரியங்களின் பரபரப்பில் மூழ்கி அதை மறக்க முயன்றான் அவன்.

அவன் கமிட்டி அலுவலகத்துக்கு வந்து தங்கிவிட்ட மறுநாளைக்கு மறுநாள் இரவு எட்டுமணி சுமாருக்கு ரத்தின வேல் பத்தர் அவனைத் தேடி வந்தார். அவர் முகத்தில் சிரிப்பைப் பார்க்க முடியாதபடி மிகவும் கவலை யாயிருப்பதாகத் தெரிந்தது. அவர் வந்தபோது அவனும், இன்றும் ஐந்தாறு தேசியத் தொண்டர்களுமாக அமர்ந்து தோரணத்துக்காக வர்ணத் தாள்களைக் கத்தரித்து ஒட்டிக் கொண்டிருந்தார்கள். அதனால் அவன் அவரைக் கண்ட வுடனேயே எழுந்து சென்று பேசமுடியவில்லை. வாங்க பத்தரே என்று ஒரு வார்த்தை சொல்ல முடிந்தது. பத்தரும் சும்மா உட்காராமல் அவர்களோடு சேர்ந்து கொண்டு கொஞ்சம் வேலை செய்தார். ஒரு குறிப்பிட்ட காரியமாக ராஜாராமனை மட்டும் தேடிவந்தது போல் காண்பித்துக் கொள்ளக் கூசியது அவர் மனம். சிறிது நேரம் அவர்களோடு வேலை செய்து விட்டு 'உங்கிட்டத் தான் கொஞ்சம் பேசனும் தம்பி என்று சொல்லி ராஜாராமனிடம் சைகை காட்டி அவனை வெளியே கூப்பிட்டார் பத்தர்.

ராஜாராமன் பசை அப்பியிருந்த கையைக் கழுவித் துடைத்துக் கொண்டு அவரோடு வெளியே வந்தான்.

- 'ஏதோ கோவிச்சுக்கிட்டு வந்துட்டீங்க போல் இருக்கு...' -

ei * 3 *

'பாவம் அது ரொம்ப சங்கடப்படுது! இப்ப நான் திரும்பிப் போயி ரெண்டு வார்த்தை நீங்க நல்லபடியாச் சொன்னிங்கன்னு காதிலே போட்டாத்தான் அது சாப்பிட உடகாரும்...'

அவர் சொல்வதெல்லாம் - அவருடைய வாயிலிருந்து வருவதற்கு முன்ப்ே அவனுக்குப் புரிந்தவைதான்.