பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி 111 என்றாலும், என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல கேட்டுக் கொண்டு நின்றான் அவன்.

'புடவையைக் கூட கையாலே கொடுக்காமே தரை மேலே வச்சு, நகர்த்தி விட்டிங்களாம். இந்த இரண்டு நாளா மதுரம் படற வேதனையை என்னாலே பொறுக்க முடியலே.”

'என்ன தம்பீ? நான் பாட்டுக்குச் சொல்லிக்கிட்டே இருக்கேன். நீங்க பாட்டுக்குப் பேசாம நிக்கறீங்க?"

‘'வேலை இருந்தது; இங்கேயே தங்கிட்டேன். அடுத்த வங்க மனசிலே நினைச்சுக்கறதுக்கெல்லாம் நான் பதில் சொல்ல முடியுமா?' -

இப்படிப் பதில் சொன்ன விதத்திலிருந்தே ராஜாராமன் மனத்தில் கோபம் இருப்பதைப் பத்தர் புரிந்து கொண்டார்.

'தம்பி உங்களுக்குப் பல தடவை நான் உத்தரவாதம் கொடுத்தாச்சு. இது அசல் தங்கம்; மாற்றுக் குறையாத சொக்கத் தங்கம்; கில்ட் இல்லைன்னு படிச்சுப் படிச்சுச் சொல்லியும் நீங்க புரிஞ்சுக்கலே! பக்கத்திலே நிஜமான அன்போட வந்து நிற்கறவங்களோட பக்தியை அலட்சியம் பண்ணிப்பிட்டுத் தேசத்து மேலே மட்டும் பக்தி பண்ணிட முடியாது. மனுசங்க இல்லாமத் தேசம் இல்லே...'

'குத்திக் காட்ட வேண்டாம், பத்தரே என்ன காரியமா வந்தீங்கன்னு மட்டும் சொல்லுங்க...' -

"அதைத்தானே தம்பி, இப்பச் சொல்லிக்கிட்டிருக்கேன். $ 3

'அதான் அப்பவே பதில் சொன்னேனே, அடுத்தவங்க மனசிலே நினைச்சுக்கற்துக்கெல்லாம் நாம என்ன பண்ண முடியும்?" * . . . .: