பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/116

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


114 ஆத்மாவின் ராகங்கள் செய்யத் தொடங்கியிருந்தாள். அதைத் தொடர்ந்து,

'தெலியலேது ராமா பக்தி மார்க்கமு' - என்று அவள் உருகி

உருகிப் பாடிய குரலையும் அவன் கேட்டான். அப்போது

பத்தர் மேலே படியேறி வந்து, அவனிடம் ஏதோ சொல்ல

விரும்பினாற்போலத் தயங்கித் தயங்கி நின்றார்.

"என்ன பத்தரே? ஏதோ சொல்ல வந்திருக்கீங்க போலத் தெரியுதே?' - -

'ஒண்ணுமில்லே! அடிக்கடி சொன்னாலும், நீங்க கோவிச்சுப்பீங்களோன்னு பயமாயிருக்குத் தம்பி 'அது மேலே உங்களுக்குக் கோபம் இல்லே'ன்னு சொல்லி ஒரு மாதிரிச் சமாதானப்படுத்தி வச்சிருக்கேன். மறுபடியும் ஏதாவது கோபமாப் பேசிச் சங்கடப் படுத்திடாதிங்கன்னு சொல்லிட்டுப் போகத்தான் வந்தேன்...'

'சரி சரி! போம். சதா உமக்கு இதே கவலைதான் போலிருக்கு. :- . -

ராஜாராமன் பத்தரை நோக்கிப் புன்முறுவல் பூத்தான். அவன் முகத்தில் புன் முறுவலைப் பார்த்து அவருக்கு ஆறுதலாயிருந்தது. அவர் கீழே படியிறங்கிப் போனார். அந்த ஐந்தாறு நாட்களாகப் படிக்காத பத்திரிகைகள்புத்தகங்களை எடுத்து, வரிசைப்படுத்தத் தொடங்கினான் அவன். பழைய நவஜீவன் யங் இந்தியா தொகுப்பு வால்யூம்களை யாரோ மேஜையில் எடுத்து வைத்தி ருப்பதைக் கண்டு, ஒரு கணம் அதை அலமாரி யிலிருந்து யார் வெளியே எடுத்திருக்கக் கூடுமென்று யோசித்தான் அவன். மதுரம் எடுத்திருப்பாளோ என்று சந்தேகமாயிருந்தது. அது சாத்தியமில்லை என்றும் தோன்றியது. அப்புறம் பத்தரை விசாரித்துக் கொள்ளலாமென்று நினைத்துக் கொண்டே, அவற்றை அவன் உள்ளே எடுத்து வைத்தபோது, அளவாகத் தாளமிடுவதுபோல் காற்கொலுசுகளின் சலங்கைப்பரல்கள் ஒலிக்க யாரோ:படியிறங்கும் ஒலி கேட்டுத் திரும்பினான். மதுரம் காபியோடு வந்து கொண்டிருந்தாள். அவளுடைய