பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/121

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி 119 கடுக்கன்களும் மின்ன அந்த அம்பலக்காரர் தோற்றமளித்தார்.

பதினெட்டாம் படிக்கோவில் அரிவாள் போல மீசை

கம்பீரமாயிருந்தது. குரல் தான் இவ்வளவுக்கும்

பொருந்தாமல் கரகரத்த கீச்சுக் குரலாயிருந்தது.

'சாமி காந்திக்கார கட்சியிலே ரொம்பத் தீவிரம் போலேயிருக்கு 21 x

"ஆமாம். அதைப்பத்தியென்ன அம்பலக்காரரே? விலை விஷயமாகத் திகைய வேண்டியதைப் பேசுங்க..."

" στού7 மதிப்பைக் குத்தகைக்காரனிட்டவே சொல்லியிருந்தேனே சாமி வீடு ஒரு ஆயிரத்தஞ்சு நூறும், நெலம் வகையறாவுக்காக ஆறாயிரத்தஞ்சு நூறுமா மொத்தத்திலே எட்டாயிரத்துக்கு மதிப்புப் போட்டேன்...'

'இந்த விலைக்குத் திகையாது. அம்பலக்காரரே பத்தாயிரத்துக்குக் குறைஞ்சு விற்கிற பேச்சே கிடையாது...'

'இவ்வளவு கண்டிஷ்னாப் பேசினிங்கன்னா எப்படி சாமி கொஞ்சம் இடம் கொடுத்துப் பேசுங்க...' .

இப்படி அம்பலக்காரர் சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் ராஜாராமனின் நண்பரான தேசத் தொண்டர் - ஒரு நிமிஷம் தன்னோடு உட்பக்கமாக வருமாறு - ஜாடை செய்து அவனைக் கூப்பிட்டார். அவன் எழுந்து சென்றான்.

'ஒன்பதாயிரம்னு ரெண்டு பேருக்கும் பொதுவா வச்சுக்கலாம். அதுவே நல்ல விலைதான் அப்பா. ஆனா, அதை இப்பவே அவன்கிட்ட சொல்லாதே. யோசிச்சு வைக்கிறேன். காலையிலே வாரும் அம்பலக்காரரேன்னு சொல்லியனுப்பு. காலையிலே வந்ததும், ஒன்பதாயிரத்தி ஐநூறு ன்னாத் திகையும்னு பேச்சை ஆரம்பிச்சா அவன் ஒன்பதாயிரத்துக்கு வழிக்கு வருவான். ஏதாவது ஒரு 'அக்ரிமெண்ட் எழுதிக் கொண்டு கொஞ்சம் அட்வான்ஸ் வாங்கிக்கலாம். அப்புறம் ஒரு வாரத்திலே பூராப்