பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 ஆத்மாவின் ராகங்கள்

'வச்சிருக்கறதைப் பத்தி எனக்கொண்ணுமில்லை. ஆனா

இவ்வளவு அவசரப்பட்டு ஊருக்கு முந்தி நிலம், வீட்டையெல்லாம் ஏன் விற்கணும்?" -

'விற்றாச்சு! இப்ப அதைப் பற்றி என்ன? பணத்தைக் கொஞ்சம் அட்வான்ஸா வாங்கியிருக்கேன். ஒரு வாரத்திலே ரெஜிஸ்திரேஷன் முடியும்போது மீதிப் பணமும் கிடைக்கும்...' -

'தம்பி நான் சொன்னால் கோவிச்சுக்க மாட்டீங்களே?'

'எதைச் சொல்லப் போlங்கன்னு இப்பவே எனக்கெப்படித் தெரியும்?"

"பணத்தைக் கொடுத்து வைக்கிறதுக்கு என்னைவிடப் பத்திரமான இடம் இருக்குன்னுதான் சொல்ல வந்தேன்."

'யாரிட்டக் கொடுத்து வைக்கலாம்.கிறீர்?" 'மதுரத்துக்கிட்டக் கொடுத்து வைக்கலாம் தம்பி"

பத்தரின் யோசனையைக் கேட்டு அவன் மனம் கொதிக்கவோ ஆத்திரமடையவோ செய்யாமல் அமைதியாயிருந்தான். அவனுக்கும் அவர் சொல்வது சரியேன்றே பட்டது. வாசகசாலைக்காகவும், வேறு காரியங்களுக்காகவும் அவள் இதுவரை செலவழித்திருப்பதைத் திருப்பி எடுத்துக் கொள்ளச் சொல்லுவதோடு, மேலே செலவழிக்க வேண்டிய சந்தர்ப்பம் எப்போது ஏற்பட்டாலும், தான் கொடுத்து வைத்திருக்கும் தொகையிலிருந்தே செலவழிக்க வேண்டும் என்பதையும் அவளிடம் வற்புறுத்திச் சொல்லி விடலாமென்று எண்ணினான் அவன். தான் கூறியதை அவன் மறுக்காதது கண்டு பத்தருக்கு வியப்பாயிருந்தது. அவன் தட்டிச் சொல்லாமல் உடனே அதற்கு ஒப்புக் கொள்வான் என்று எதிர்பார்க்கவேயில்லை அவர். அவன் ஒப்புக் கொண்டாற்போல அமைதியாயிருந்ததைக் கண்டு அவருக்கு மகிழ்ச்சியாயிருந்தது.