பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 123

அவன் மேலே போய்விட்டு மறுபடி வெளியே புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது, மொட்டை மாடிப் பக்கமிருந்து வளைகளின் ஜலதரங்கநாதமும், புடவை சரசர்த்துக் கொலுசுகள் தாளமிடும் ஒலிகளும் மெல்ல மெல்ல நெருங்கி வந்தன. * - -

"நல்லவாளுக்கு அழகு, சொல்லாமப் போயிடறது தான், இல்லையா?” -

'அப்படி எல்லாம் ஒண்ணுமில்லை; பத்தர் சொல்லியிருப்பாரே'

"சொன்னார். ஆனா, நீங்களே எங்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போயிருந்தீங்கன்னா, எனக்கு இன்னும் சந்தோஷமா இருந்திருக்கும்... ' , - .

"மேலூர் போக வேண்டியிருந்தது. திடீர்னு நினைச்சுண் டேன். உடனே அவசரமாகப் புறப்பட வேண்டியதாச்சு..."

"பரவாயில்லை. இப்ப கொஞ்ச நாழிகை இருங்கோ, சாப்பாடு கொண்டு வரேன். சாப்பிட்டு அப்புறம் வெளியே போகலாம்...' - - * -

'சரி இன்னொரு காரியம் மதுரம்..."

"என்ன? சொல்லுங்கோ."

மேலுர் நிலத்தையும், வீட்டையும் விலை பேசி அட்வான்ஸ் வாங்கியிருப்பதையும், அந்தப் பணத்தை அவளிடம் கொடுத்து வைக்கப்போவது பற்றியும் சொல்லிவிட்டு, அதில் அவளுக்குச் சேர வேண்டிய பழைய கடன் தொகையை எடுத்துக் கொள்வதோடு, புதிதாக ஏதேனும் வாசகசாலைக்கோ, தனக்கோ செலவழிக்க வேண்டியிருந்தாலும் அதிலிருந்தே செலவழிக்க வேண்டுமென்று அவன் நிபந்தனைகள் போட்டபோது, அவனுடைய அந்த நிபந்தனைகளைக் கேட்டு அவளுக்குக் கோபமே வந்து விட்டது.