பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 ஆத்மாவின் ராகங்கள்

'நீங்க அடிக்கடி இப்படிப் பேசறது. உங்களுக்கே நல்லா இருந்தா சரிதான்! திடீர் திடீர்னு ரூபாய் அனாப் பைசாப் பார்த்துக் கணக்கு வழக்குப்பேச ஆரம்பிச்சுடlங்க. நான் கணக்கு வழக்குப் பார்த்து இதெல்லாம் செய்யலை. ஒரு பிரியத்திலே செஞ்சதையும், செய்யப்போறதையும் கணக்கு வழக்குப் பேசி அவமானப்படுத்தாதீங்க? நீங்க பணத்தை எங்கிட்டக் கொடுத்து வைக்கறேன்னு சொல்றதைக் கேட்டு நான் ரொம்ப சந்தோஷப்படறேன்! ஆனா, என்னை ஏன் அந்நியமாகவும், வேற்றுமையாகவும் நினைச்சுக் கணக்கு வழக்குப் பார்க்கறிங்கன்னு தான் புரியலை...'

இதைச் சொல்லும்போதே அவள் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருவதைப் பார்த்து ராஜாராமன் ஒன்றும் பேசத் தோன்றாமல் நின்றான். மதுரத்தின் மனம் அனிச்சப் பூவைக் காட்டிலும் மென்மையாகவும், உணர்வுகள் அசுணப் பறவையைக் காட்டிலும் இங்கிதமாகவும், இருப்பது அவனுக்குப் புரிந்தது. அழுத்தி மோந்து பார்த்தாலே வாடிவிடும் அனிச்சப்பூவும், அபஸ்வரத்தைக் கேட்டால் கீழே விழுந்து துடிதுடித்து மரண அவஸ்தைப்படும் அசுணப் பறவையும் தான் அவளை எண்ணும்போது அவனுக்கு ஞாபகம் வந்தன.

ஒன்றும் பேசாமல் மேலூரில் அட்வான்ஸ் வாங்கிக் கொண்டு வந்திருந்த ரூபாய் நோட்டுகளை எடுத்து அவளிடம் கொடுத்தான்.

மதுரம் அதை இரண்டு கைகளாலும் அவனிடமிருந்து

வாங்கிக் கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

'இப்ப அப்படி என்ன பெரிய பணமுடை வந்து விட்டது உங்களுக்கு? எதற்காகத் திடீரென்று சொல்லாமல் ஒடிப்போய் நிலத்தையும் வீட்டையும் விற்கிறதுக்கு ஏற்பாடு பண்ணிட்டு வரணும்?' . :

"அதுக்காகன்னே நான் போகலை; போன இடத்திலே முடிவானதுதான்...' - - r