பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 131

முற்றிலும் எதிர்பாராத விதமாக, ஒரு வருஷத்திற்கு ஜாமீன் கோரி ராஜாராமன் மேல் வழக்குத் தொடுக்கப் பட்டது. வேறு சில தேசபக்தர்கள் மேலும் இப்படி ஜாமீன் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. அரசியல் கைதிகளுக்கும், தேசபக்தர்களுக்கும் ஜாமீன் கேட்பது வழக்கமில்லாத புதுமையாயிருந்தது. ஜாமீன் தர மறுப்பது என்று எல்லாத் தேசபக்தர்களும் முடிவு செய்தார்கள். ராஜாராமனும் அதே முடிவுக்கு வந்தான். அரசாங்கம் யாவரையும் கைது செய்தது. ராஜாராமனும் கைதானான். முத்திருளப்பன், குருசாமி இருவர் மேலும் ஜாமீன் வழக்கு இல்லாததால் அவர்கள் வெளியிலேயே தங்கினர்.

எங்கோ வெளியே சுற்றிவிட்டு வாசக சாலைக்குத் திரும்பி வந்தபோது, மொட்டைக் கோபுர வாசலில் வைத்து அவனைப் போலீஸ்ார் கைது செய்ததால் - அந்தச் செய்தி உடனே பத்தருக்கோ மதுரத்துக்கோ எட்டவில்லை.

போலீஸ் எஸ்கார்ட்டுடன் இரண்டு நாள் கழித்து அவன் கடலூருக்குக் கொண்டு போகப்பட்டான். பத்தர், முத்திருளப்பன், குருசாமி மூன்று பேருமே ரயில் நிலையத்தில்தான் அவனைப் பார்த்தார்கள்.

"அதுக்கு என்ன சொல்லட்டும் தம்பி - என்று கண்கலங்கிய பத்தரைப் பார்த்து: .. ... .

'கவலைப்படாதிரும் பத்தரே! உங்களைப்போல் மதுரமும் கண் கலங்கினாலும், உங்களுக்கே ஆறுதல் சொல்ற மனபலம் அவளுக்கு இருக்கு ' - என்றான் ராஜாராமன். கைவிலங்குகளோடு செய்த அந்த இரயில் பயணத்தின் போது, அவன் மனமுருகி நினைவில் பதித்துக் கொண்ட ஒரே காட்சி - ஒரு நொண்டிப் பிச்சைக்காரன் திருச்சி நிலையத்தில் வண்டிக்குள் ஏறி, . . . -

'பண்டித மோதிலால் நேருவைப்

பறி கொடுத்தோமே!