பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 ஆத்மாவின் ராகங்கள்

பறி கொடுத்தோமே! - உள்ளம்

பறிதவித்தோமே! - - என்று பாடியது தான். தன்போக்கில் பிச்சைக்கு வரும் இரயில் பச்சைக்காரனைக்கூட அந்தத் தேசிய நஷ்டம் பாதித்திருப்பதை உணர்ந்தபோது, அவனுக்கு ஆறுதலா யிருந்தது. எஸ்கார்ட்டிடம் சொல்லித் தன் கையிலிருந்த சில்லறையில் கொஞ்சம் அந்தப் பிச்சைக்காரனுக்கு எடுத்துப் போடும்படி செய்தான் ராஜாராமன். தேசபக்தியுள்ள பல பிரபல பாடகர்கள் பாடியிருந்த இந்தப் புதிய பாட்டு இரயிலில் பிச்சையெடுக்க வருகிறவனாலும் அழுது கொண்டே பாடப் படுகிறது என்பதைக் கவனித்த போது, தேசம் முழுவதுமே சுதந்திரத்தை எதிர் நோக்கி அழுது தவிப்பதை அவன் உணர்ந்தான். ஒரு தேசபக்தன் என்ற முறையில் அவனுக்குப் பெருமிதமாக இருந்தது.

கடலூர் சிலையில் வேறொரு எதிர்பாராத தொந்திரவும் இருந்தது. முன்பு வேலூர் ஜெயிலில், கூட இருந்த எல்லாருமே தேசபக்தர்களாக இருந்தார்கள். இங்கேயோ அப்படியில்லாமல் பயங்கரவாதிகள் சிலரும், பல்வேறு கிரிமினல் குற்றவாளிகளும் அடங்கிய அஸோஸியேஷன் பிளாக் ஒன்றில் ராஜாராமன் அடைக்கப்பட்டான். பிருகதீஸ்வரனைப் போல் நட்புக்கும், அன்புக்கும் உரியவராக இங்கு யாருமே கிடைக்கவில்லை. வார்டர்களோ, கிரிமினல் கைதிகள் யார், தேசபக்தர்கள் யார் என்று சிறிதும் தரம் பிரிக்காமல் எல்லாரையுமே கிரிமினல் கைதிகளைப் போலவே கொடுமையாக நடத்தினார்கள். சிறைவாசத்தின் முழுக்கொடுமையும் இப்போது கடலூரில் தான் ராஜாராமனுக்கு நன்றாகத் தெரிந்தது. அவன் கடலூருக்கு வந்த இரண்டாவது வாரம் மதுரம் எழுதிக் கொடுத்த கடிதம் ஒன்றை வாங்கிப் பத்தர் தபாலில் அவனுக்கு அனுப்பியிருந்தார். உண்மை அன்புக்கு மனிதர்களில்லாத அந்தச் சிறையின் சூழலில், அவள் கடிதம் அவனுக்குப் பெரிய ஆறுதலாயிருந்தது. .