பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 133

"யாருடைய பவித்திரமான மனத்தில் நான் சதாகாலமும் விரும்பிச் சிறைப்பட்டுக் குடியிருக்கிறேனோ அவருடைய பாதாரவிந்தங்களுக்கு அநேக கோடி நமஸ்காரங்கள். செய்தியைப் பத்தர் வந்து சொன்னதும் அதிர்ந்துபோனேன். பாவி எந்த வேளையில் உங்கள்மேல் பிரியம் வைத்தேனோ, அந்த வேளையிலிருந்து உங்களுக்குச் சிறைவாசமாக வந்து கொண்டிருக்கிறது. சிறு வயதிலிருந்து நான் கூண்டுக் கிளியாகவே வளர்க்கப் பட்டவள். உங்களைப் பார்ப்பதற்கு முன்னால் மனிதர்கள் மேல் பிரியம் செலுத்துவதைப் பற்றி எனக்குத் தெரியாது. உங்களைக்கூட நான் முகத்துக்கு முகம், நேருக்கு நேர் முதலில் பார்க்கவில்லை. நான் முதன் முதலில் பார்த்தது உங்கள் பொன்நிற உட்பாதங்களைத்தான். அழகர் கோவில் தங்க விமானத்தில் பளிரென்று இரண்டு பாதங்களை வடித்திருக்கிறார்கள். மொட்டை மாடி விளிம்புச் சுவரில் காலை வெயிலில் தகதகவென்று தங்கத் திருவடிகளாய் மின்னிய உங்கள் உள்ளங்கால்களைத்தான் முதன் முதலில் நான் பார்த்தேன். அந்தப் பாதங்களைப் பார்த்தவுடன் கள்ளழகர் கோவில் விமானத்தில் பார்த்த தங்கத் திருவடிகள் தான் எனக்கு நினைவு வந்தன. தெரியாமல் நான் உங்கள் கால்களில் எறிந்துவிட்ட பூக்களுக்காக நீங்கள் என்னைக் கோபித்துக் கொண்டீர்கள். அப்போது அதற்காக நான் உங்களிடம் பணிந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டாலும் - அர்ச்சிக்க வேண்டிய தகுதியுள்ள பாதங்களிலேயே என்னுடைய பூக்களை நான் அர்ச்சித் திருப்பதாக உள்ளுர மகிழ்ந்து பெருமைப்படவே செய்தேன். இப்படி எல்லாம் மனம் திறந்து உங்களுக்குக் கடிதம் எழுதும்போது, ஏதாவது தப்பாக அசட்டுப் பிசட்டென்று எழுதுகிறேனோ என்று எனக்குப் பயமாகவும் இருக்கிறது. நான் ரொம்பப் படித்தவளில்லை. ஜமீன்தாருடைய ஏற்பாட்டில் தமிழ்ச் சங்கத்துக் கவிராயர் ஒருவர் கொஞ்ச நாள் நிகண்டு, நன்னூல், நைடதம், திருவிளையாடற் புராணம், பிரபுலிங்க லீலை எல்லாம் எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். வாசகசாலைக்கு வருகிற பத்திரிகைகளில் சுதந்திரச் சங்கு, காந்தி - எல்லாம் நானே