பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி 135 என்னுடைய இந்தக் கடிதத்துக்கு நீங்கள் பதில் எழுத

முடியாமற் போனாலும் பத்தர் வரும்போது அவரிடம்

நேரிலே ஏதாவது கூறி அனுப்புங்கள். அதைக் கேட்டே நான்

திருப்திப் பட்டுக்கொள்வேன். பத்தர் வரும்போது அவரிடம்

நேரில் சில தகவல்கள் சொல்லியனுப்புகிறேன். இந்தக்

கடிதத்தில் என்னையறியாமல் நான் ஏதாவது

பிழைசெய்திருந்தால் பொருத்தருள வேண்டுகிறேன்.

என்றும் தங்கள் அடிமை

மதுரவல்லி'

-என்று கடிதத்தை முடித்திருந்தாள், அவள். இந்தக் கடிதத்தை

அது தனக்குக் கிடைத்த தினத்தன்றே பலமுறை திரும்பத்

திரும்பப் படித்துவிட்டான் ராஜாராமன். பாலைவனத்தின்

டையே பயணம் செய்யும்போது பருகக் கிடைத்த நல்ல தண்ணீர் போல இருந்தது அது.

வேலூர் சிறைவாசம் எந்த அளவுக்கு ஒரு குருகுல வாசத்தைப் போல் சுகமாகக் கழிந்ததோ அப்படி இது கழியவில்லை. வேலூரிலும் 'தனிக் கொட்டடி இல்லையானாலும் ஒரே பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த அத்தனை கைதிகளும் சுதேசி இயக்கத்தினால் மட்டுமே சிறைக்கு வந்தவர்களாக இருந்தனர். தவிர, அந்தச் சிறைவாசத்தின் கடுமையே தெரியாதபடி, பிருகதீஸ்வரன் போன்ற ஒருவரின் நட்பும் பாசமும் அவனுக்கு அங்கே கிடைத்திருந்தன. இங்கேயோ எல்லாமே கடுமையாக இருந்தது. - - - -

இருபது முப்பது பேர் கொண்ட அஸோஸியேஷன் பிளாக் முதல் நாள் மாலை ஆறு மணிக்குப் பூட்டப்பட்டால் மறுநாள் காலை ஆறுமணிக்குத்தான் மறுபடி திறந்து விடுவார்கள். அவசர மலஜல உபாதைகளை உள்ளேயே ஒரு கோடியில் தான் முடித்துக் கொள்ள வேண்டும். ஈக்களும், கொசுக்களும், தாராளமாகப் பறக்கக் கக்கூஸ் வாடைவீசும் ஒரு நரகமாக இருந்தது அந்தக் கொட்டடி இரவு நேரமாக நேரமாகக் கொட்ட்டியிலேயே உள்ளேயிருக்கும் துர்