பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 ஆத்மாவின் ராகங்கள்

சிறையில் அப்போது விடியும் நேரம் நெருங்கிவிடவே 'பரேடுக்காக அவனை அடித்து எழுப்பிவிட்டார்கள். அன்று முழுவதும் சோகம் இழையும் அந்த இனிய குரல் 'தெலியலேது ராமா' - என்று அவன் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது. எல்லையில்லாதோர் அடர்ந்த காட்டில் எங்கோ ஒரு மூலையில், இருளென்றும் ஒளியென்றும் புரியாத மருளில் ஒலிக்கும் சோகக் குயிலின் குரல் ஒன்று கூவுவது போல் அந்தக் குரல் அவன் செவிகளில் கேட்டுக் கொண்டே இருந்தது. அதே பிரமை அன்று முழுவதும் அவனை வாட்டியது. மனவிளிம்பில் தாபமாகவும் தாக மாகவும் ஊமைத்தனமாக நின்று கதறிய வேதன்ை சில வரிகளாக உருப்பெற்று வார்த்தைகளாகச் சேர்ந்து கோத்துக் கொண்டு வந்தன:

'எல்லையிலாத தோர் காட்டிடை - நள் இருளென்றும் ஒளியென்றும் - சொல்ல வொணாத தோர் மயக்கத்தை - இளஞ் சோகக் குயில்ஒன் றிசைக்கிறது - அதன் சுவடு முழுதும் தெரியுதிலை சோகம் முழுவதும் புரியுதிலை, தொல்லைப் பழங்கால முதலாய் - எனைத் தேடி அலையும் குரல் - சொல்லைக் குழைத் தாளுங்குரல் - ஒரு சோகம் முதிர்ந்து முதிர்ந்துறிப் - பல்லாயிர மூழிகள் தொடர்ந்து பாடிப் பசித்த குயிலின் குரல்...' - - முறையின்றியும் முறையாகவும், வரிசையாகவும் வரிசையின்றியும் தோன்றிய இதைத் திரும்பத் திரும்பச் சொல்லிச் சொல்லிப் பார்த்து நினைவு கொள்ள முடிந்ததே ஒழிய, ஒழுங்குபடுத்தி எழுதி வைத்துக் கொள்ள வசதிகள் இல்லை. பென்சில் காகிதத்துக்கு வார்டனிடம் கெஞ்சத் தயங்கி, இந்த வரிகளைத் திரும்பத் திரும்ப முணுமுணுத்து மனப்பாடமே செய்து கொண்டான் அவன். பொறுக்க