பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/142

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


140 - ஆத்மாவின் ராகங்கள் ஜமீன்தார் இதை அதிகமாக வெளியிலே சொல்லிக்கிற தில்லே! ஆனால், தன் மகள்ங்கிற முறையிலே மதுரத்துக்கிட்ட அவருக்குக் கொள்ளை வாஞ்சை...'

அதுவரை ஜமீன்தாரைப் பற்றித் தான் நினைத்திருந்த நினைப்புக்களுக்காக மனம் கூசி, என்ன பதில் பேசுவதென்றே தெரியாமல் இருந்தான், ராஜாராமன். பயத்தாலோ, வெட்கத்தாலோ மதுரம் தன்னிடம் ஜமீன்தாரைப் பற்றிப் பேசிய சமயங்களில்கூட, அவரைத் தன் தந்தை என்று தெரிவிக்காமல் விட்டிருக்க வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு. -

'மனுஷன் போயிட்டாலும் தன்னோட உயில்லே முறையா ஜமீன்தாரிணிக்குப் பிறந்த வாரிசுகளைவிட அதிகமாகவே மதுரத்துக்கு வேனது எழுதி வச்சிட்டுப் போயிருக்கிறாருங்க..."

'இதை ஏன் இது வரை நீங்க எங்கிட்டச் சொல்லலே?"

“எப்படிச் சொல்றதுன்னு தெரியலே; அதுனாலே சொல்லலே. சொல்ல அவசியமும் ஏற்படலை! ஜமீன்தாரோட முகஜாடையை நீங்கள் மதுரத்துக்கிட்டப் பார்த்திருப்பிங்கன்னு நெனைச்சேன்....'

'மதுரம்கூட உங்ககிட்டச் சொல்லலியா தம்பி

'என்ன கேள்வி கேட்கிறீங்க பத்தரே! அம்மாவுக்குப் புருஷன் யாருன்னு மகள் எப்படிக் கூச்சமில்லாமல் பேச முடியும்?' . . .

"ஏன் இதுலே தப்பொண்ணுமில்லீங்களே?" - ராஜாராமனுக்கு மனம் இலேசாகி . விட்டாற்

போலிருந்தது. மகள் பெயருக்கு அபிஷேகம் செய்ய வந்த தந்தையைப் போல் அந்த நாகமங்கலம் ஜமீன்தார் கோவிலில்