நா. பார்த்தசாரதி 13 ஆன்மாவைப் பெரிதாக மதித்து வாழ்ந்த காலத்திற்கும் மனத்தைப் பெரிதாக மதித்து வாழும் காலத்திற்கும் மனத்தைப் பெரிதாக மதித்து வாழும் காலத்திற்கும் நடுவே எவ்வளவோ தூரம் நமக்குத் தெரியாமலே இருக்கிறது. இந்த இரண்டு சகாப்தங்களின் எல்லைகளையும் பார்த்தவர் காந்திராமன். கங்கையின் உற்பத்தியையும், சங்கமத்தையும் பார்ப்பதுபோல், இரண்டு இந்திய சமூகங்களையும் அவர் பார்த்திருக்கிறார். இணையற்ற தியாகமும் சத்தியாக்கிரகமும், விரதங்களாயிருந்த காலத்திலும் இந்தியாவில் அவர் வாழ்ந்திருக்கிறார். தீ வைத்தலும், கலவரம் செய்தலும், பிடிவாதங்களாகிவிட்ட காலத்து இந்தியாவிலும் அவர் வாழ்ந்திருக்கிறார். சராசரி இந்தியன் ஆன்மாவை மதித்து வாழ்ந்த காலத்தின் மங்கலமான முடிவும் அவர் கண்களில் தென்பட்டிருக்கிறது. ஆசைகளும் அவை விளையும் மனமுமாக வாழத் தொடங்கிவிட்ட காலமும் அவர் கண்களில் தென்பட்டிருக்கிறது. ஒரு பத்திரிகையாளன் என்ற முறையில் இப்படி இரண்டு சகாப்தங்களின் எல்லைகளைப் பார்த்தவரை உலகத்துக்கு வரலாறாக எழுதிக்காட்ட வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டு. ஆனால், அந்த ஆசை இன்றுவரை நிறைவேறவில்லை.
ஏழு வருடங்களுக்கு முன்பு சென்னையில், ராஜாஜி ஹாலில் வைத்துப் பெரியவர் காந்திராமனுடைய அறுபதாண்டு நிறைவு விழவைக் கொண்டாடியபோது, முதல் முதலாக அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதிப் புத்தகமாக வெளியிட வேண்டுமென்ற என் ஆசையை நான் அவரிடம் வெளியிட்டேன். சிரித்துக் கொண்டே அதை ஒப்புக் கொண்டு இசைவு தர மறுத்துவிட்டார் அவர். . . . . . .
'என் மேலுள்ள பிரியம் உனக்கு இந்த ஆசையை உண்டாக்கியிருக்கிறது, ராஜூ ஒரு மனிதன் உயிரோடு இருக்கிற வரை அவனுடைய வாழ்க்கை வரலாறு பூர்த்தி யாகி விடுவதில்லை. உயிரோடு இருப்பவர்களுடைய வாழ்க்கை வரலாறுகளில் பொய்யும், மிகைப்படுத்தலும்,