பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 1 49

‘இவர்கள் மிருகங்களை மனிதர்களாக்குகிறார்கள்! மனிதர்களைத் தெய்வங்களாக்குகிறார்கள் என்று எண்ணிய போது மிகமிக விநோதமாக வளர்ந்தது அந்தச் சிந்தனை. வேட்டையிலும், குடியிலும், மல்யுத்தத்திலும் போதையேறிக் கிடந்த நாகமங்கம் ஜமீன்தாரைத் தனபாக்கியம் மனிதனாக்கிச் சங்கீத ரசிகராக மாற்றி விட்டாள். தனபாக்கியத்தின் மகளோ வெறும் மனிதனாகிய என்னைத் தன்னுடைய பக்தியால் தெய்வமாகவே ஆக்க முயல்கிறாள். என்னையே எண்ணி உருகி உருகித் 'தெலியலேது ராமா பக்தி மார்க்கமு' - என்று பாடுகிறாள். மனிதனைப் பக்தி செய்த உடம்பை இழப்பதன் மூலம் தெய்வத்தைப் பக்தி செய்யும் தத்துவத்துக்கு உலகத்தைப் பழக்கும் உபாசனா மார்க்கங்களில் ஒன்றாகவே தொடக்கத்தில் இந்தத் துறை தோன்றியதோ என்றெல்லாம் பலவிதமாகச் சிந்திக்கத் தொடங்கியபோது அவன் மனத்திலிருந்த பல பழைய மாற்சரியங்களை அந்தச் சிந்தனை போக்கி விட்டது. -

அந்த வருஷம் காந்தியடிகள் சட்டமறுப்பு இயக்கத்தை வாபஸ் வாங்கினார். இயக்கம் இருந்தவரை சிறைக்குப் போகவும் அடிபடவும் நேர்ந்த தேசியவாதிகள் அனைவரும் இப்போது வெளியே இருந்ததால் - அவர்கள் செய்ய வேண்டிய பணிகளுக்கு நிறைய வாய்ப்பிருந்தது. ஆன்மா பரிசுத்தமான இலட்சியத்தை நிரூபிக்கக் காந்திமகான் இருபத்தொரு நாள் கடுமையான உண்ணாவிரதம் இருந்தார். அந்தச் சமயங்களில் கிடைத்த ஹரிஜன், சுதந்திரச் சங்கு, காந்தி பத்திரிகைகளின் இதழ்களை ராஜாராமனும் நண்பர்களும் கண்களில் நீர் நெகிழ வாசித்தனர். காந்தியடிகள் சத்தியாக்கிரக ஆசிரமத்தைக் கலைத்த போதும், அரசியலிலிருந்து விலகிக் கொள்ளப் போவதாக அறிவித்த போதும், வேதனையடைந்த தேசபக்தர்கள்