பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 151 பங்களாவில் தங்கினார். பெண்களோடு பெண்களாகப் போய், அவருடைய ஹரிஜன் நிதிக்குத் தன் நகைகளில் கணிசமான பகுதியைக் கொடுத்து விட்டு வந்தாள் மதுரம். தன்னிடம் கேட்காமல் தானாகவே அவள் இந்த நல்ல காரியத்தைச் செய்தது ராஜாராமனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ராஜாராமனும், நண்பர்களும் கூட ஒரு பெருந்தொகை திரட்டி ஹரிஜன நிதிக்காக மகாத்மாவிடம் கொடுத்தனர். அப்போது உடனிருந்த டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன் திடீரென வாய் தடுமாறி, மிஸ்டர் ராஜாராமன் - என்று கூப்பிடுவதற்குப் பதில் மிஸ்டர் காந்திராமன் - என்று அவனைக் கூப்பிடவே, வைத்தியநாதய்யர் சிரித்துக் கொண்டே, 'இப்படியே உன் பெயரை மாற்றிக் கொண்டு விடு காந்தி மதுரைக்கு வந்ததற்கு அடையாளமாக நீ இதைச் செய்யச் சொல்லித்தான் மிஸ்டர் ராஜன் உனக்கு இப்படிப் பெயர் சூட்டுகிறார்!' - என்றார். ராஜாராமனுக்கு அவர் அப்படி அழைத்தது மிகவும் மகிழ்ச்சியாயிருந்தது. 'அப்படியே செய்கிறேன்; 1 என்று சிரித்துக் கொண்டே வைத்தியநாதய்யரிடம் பணிவாகக் கூறினான் அவன். வைத்தியநாதய்யர் ராஜாராமனை மிக உற்சாகமாக மகாத்மாவுக்கு அறிமுகப்படுத்தினார். மறுநாள் காலை மகாத்மா ஒரு ஹரிஜனச் சேரிக்குச் சென்றார். மாலையில் மிகப் பெரிய பொதுக் கூட்டம் நடந்தது. மதுரையிலிருந்து அமராவதி புதுரர் வரை ராஜாராமனும் மகாத்மாவோடு சென்றான்; அங்கே புதுக்கோட்டையிலிருந்து பிருகதீஸ் வருனும் வந்திருந்தார். இருவரும் மகாத்மாவின் சந்நிதியில் சந்தித்துக் கொண்டனர். - - ". .

இதைத் தொடர்ந்து சில மாதங்கள், சுற்றுப்புற ஊர்களான சோழவந்தான், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, பெரியகுளம், உத்தமபாளையம் என்று தேசியப் பணி களுக்காக ராஜாராமனும் நண்பர்களும் அலைந்தனர். பெரிய குளமும் வத்தலக்குண்டும் தேசபக்தி உணர்வில் இயல்பாகவே நன்கு கனிந்திருந்தன. பி.எஸ். சங்கரன், முனகலா பட்டாபிராமையா முதலிய அப்பகுதித் தேச