பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 ஆத்மாவின் ராகங்கள் பக்தர்கள் அப்படிப்பட்ட சூழலை உண்டாக்கி வைத்திருந்தனர். ஆலயப் பிரவேசத்துக்காகவும் சில முயற்சிகள் நடந்தன. ஓராண்டுக் காலம் இந்தப் பணிகளில் கழிந்தது. -

மதுரம் வீட்டிலேயே வீணை வாய்ப்பாட்டு வகுப்புக்கள் நடத்தத் தொடங்கியிருந்தாள். இடையிடையே கச்சேரி களுக்கும் போய்விட்டு வந்தாள். தகப்பனார் காலமான கொஞ்ச நாளைக்குள்ளேயே நாகமங்கலத்தோடு அந்த வீட்டின் உறவுகள் விடுபட்டுப் போயின. போக்குவரவும் கூட இரு குடும்பங்களுக்கும் இடையே விட்டுப்போயிற்று. ஜமீன் குடும்பத்துக்கு இந்த உறவைக் காட்டிக் கொள்ளக் கூச்சமாயிருப்பதாகத் தெரிந்தது. தவிர ஜமீன்தாரின் உயிலில் மதுரத்தின் பெயருக்குத் தனியே சொத்து எழுதி வைத்திருந்தது வேறு மனஸ்தாபத்தை ஆழமாக்கி விட்டிருந்தது. குடும்பப் பெண்கள் பலர் ஒண்ணாம் நம்பர் சந்து தேடி வந்து படிக்கக் கூசினர். என்றாலும் ஆசைப்பட்டுத் தேடி வந்து கேட்டவர்களுக்கு மட்டுமே மதுரம் கற்பித்தாள். அப்படிப் படிக்க வருகிறவர்களிடம் அவள் காந்தியைப் பற்றியும், கதர் நூற்பது பற்றியும் கூட எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தாள். சிலர் செவி சாய்க்காவிட்டாலும், பலர் அவள் பிரசாரத்தினாலும் மாறினர்.

ராஜாராமன் காங்கிரஸ் வேலைகளில் மிக உற்சாகமாக ஈடுபட்டான். மதுரம் தன்மேல் செலுத்திய அன்பையும், பக்தியையும் ஏற்று, அவன் தேசத்தின் மேலும் பொதுக் காரியங்களிலும் பக்தி சிரத்தை காண்பித்தான். பக்தி செய்யப்படுகிறவர்களால்தான் பக்தி செய்ய முடிகிறதென்ற நுணுக்கத்தை அவன் இப்போது அனுபவ பூர்வமாக உணர முடிந்தது. மக்கள் எல்லோரும் தன்மேல் பக்தி செலுத்தினால் அதை ஏற்கும் தலைவன் நாடு முழுவதின் மேலும் பக்தி செய்ய உற்சாகம் பிறக்கிறது. ஒரு பக்தியை ஏற்கும்போது தான் இன்னொரு பக்தி செய்ய ஆர்வம் பிறக்கிறது. மதுரம் அவனைப் பக்தி செய்தாள். அவன் தேசத்தை பக்தி செய்தான். அன்பில் கிடைக்கிற உற்சாகம் எத்தனை அன்புப்