பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/157

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 155 கோடி மக்களின் நோன்பைப் போலவும் தொடங்கப்பட்ட

காங்கிரஸில், போட்டிகளும் பகைகளும் இலேசாகத் தெரி

வதையே பொறுக்க முடியாமல் கலங்கினார்கள் அவர்கள்.

இந்த தேசிய மகாவிரதம் நாளைய உலகில் வெறும் கட்சி

யாகி விடக்கூடாதே என அவர்கள் கவலைப்பட்டார்கள்.

1933-ல் திரிபுரா காங்கிரஸில் பட்டாபி தோற்று, சுபாஷ் ஜெயித்தது காந்தியடிகளுக்கு வருத்தத்தை அளிக்கவே தலைமை தாங்கிவிட்டுப் பின் சுபாஷ் ராஜிநாமா செய்தார்.

ராஜாராமனின் வேண்டுகோளுக்கு இணங்கி பிருகதீஸ்வரன் மதுரையிலேயே தொடர்ந்து சிறிது காலம் தங்கினார். 1939-ல் இரண்டாவது உலக மகாயுத்தம் தொடங்கியபோது, காங்கிரஸ் மந்திரி சபை பதவிகளை விட்டு வெளியேறியது. அந்த வருஷம் சுபாஷ் மதுரை வந்திருந்தார். வைஸ்ராய் இந்திய விடுதலையைக் கவனிக்க மறுத்ததால், வார்தாவில் கூடிய காங்கிரஸ் தனிப்பட்டவர் சட்ட மறுப்புக்கு மீண்டும் அனுமதி வழங்க முடிவு செய்தது. முதல் சத்தியாக்கிரகியாக வினோபாபாவேயைத் தேர்ந்தெடுக்க முடிவு ஆயிற்று. அப்போது முதல் பிருகதீஸ்வரனும் ராஜாராமனும் ஆசார்ய வினோபா பாவேயுடன் கடிதத் தொடர்பு கோண்டனர். ஆசிரம அமைப்புப் பற்றியும் அவரிடம் யோசனைகள் கேட்டனர். அவரும் விரிவாக எல்லாம் எழுதியிருந்தார். மதுரை யிலேயே தங்கி ஆசிரம அமைப்பு வேலைகளைக் கவனித்த பிருகதீஸ்வரன் ஒருநாள் ராஜாராமனையும் மதுரத்தையும் வைத்துக் கொண்டு சிரித்தபடியே ஒரு யோசனை கூறினார்.

'நீங்கள் ரெண்டு பேரும் வார்தாவுக்குப் போய் மகாத்மாவின் ஆசி பெற்றுக் கலியாணம் செய்து கொண்டால் என்ன? - -

இதைக்கேட்டு மதுரம் தலைகுனிந்தாள்; சிறிது நேரத்தில் சிரித்துக் கொண்டே படியேறி மொட்டை மாடி வழியே வீட்டிற்கும் ஓடிவிட்டாள். ராஜாராமன் பதில்