நா.பார்த்தசாரதி - 157
'உங்கள் ஆசீர்வாதம்...' என்றான் ராஜாராமன். அவன்
முகம் அப்போது மிகவும் மந்தகாசமாக இருந்தது.
இதழ்களில் அபூர்வமாகப் புன்சிரிப்பும் தெரிந்தது. -
மதுரையிலிருந்து நாகமங்கலத்துக்குப் போகிற வழியில் மதுரத்துக்குச் சொந்தமாக ஜமீன்தார் எழுதி வைத்த ஒரு பெரிய தோட்டம் இருந்தது. மாமரங்களும், நெல்லி மரங்களும், தென்னைக் கூட்டமுமாக இருந்த அந்த இருபத்தைந்து ஏக்கர் பரப்புள்ள தோட்டத்தின் நடுவே ஒரு தாமரைக் குளமும், மிகப் பரந்த விழுதுகளோடு படர்ந்து பெருங் குடைபோல் பழங்காலத்து ஆலமரம் ஒன்றும் இருந்தன. அதை ஆசிரமத்துக்குத் தந்துவிடுவதாக மதுரம் சொல்லிக் கொண்டிருந்தாள். தனபாக்கியத்தின் சம்மதம் பெறச் சமயம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். பிருகதீஸ்வரனுக்கு அந்த ஆலமரமும் குளக்கரையும் ரொம்பப் பிடித்திருந்தது. அடிக்கடி அதை வியந்து பேசிக் கொண்டிருந்தார். r 3
'ஒரு காலத்தில் ஆலமரத்தடிகளில் வளர்ந்த தத்துவங்கள் தான் இன்று பாரதம் முழுவதும் வியாபித்திருக்கிறது. இந்த இடத்தைப் பார்த்ததும் எனக்கு வேத காலத்துத் தபோவனங்களை நினைக்கத் தோன்றுகிறது' என்றார் பிருகதீஸ்வரன். -
'இந்த இடத்தில் ஒரு நாளந்தா சர்வகலாசாலையையே உண்டாக்கி விடலாம்" என்று அடிக்கடி புகழ்வது அவர் வழக்கமாயிருந்தது. - - - - - - - - - , -
'எங்கம்மாவைக் கேக்கனும்கிறதே இல்லை! அவ படுத்த படுக்கையாயிட்டா. இன்னமே பொழச்சா கடவுள் புண்ணியம்தான். உங்களுக்கு அந்த இடம் பிடிச்சிருந்தா நீர்னே பத்திரம் எழுதி சாஸனம் பண்ணிக் கொடுத்து டறேனே. என்று மதுரம் ஆர்வமாகச் சொன்னா லும் பிருகதீஸ்வரன் அப்படிச் செய்யத் தயங்கினார். இதற்குள் தனபாக்கியமே ஒரு நாள் பிருகதீஸ்வரனைக் கூப்பிட்