பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/161

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 159 சந்துலே தொழில் பண்றான்னு அவப்பேர் வரப்பிடாது. நீங்க பாத்துக்கணும். மகராசனா இருப்பீங்க ஐயா...'

'நீங்க சொன்னாக்கூட உங்க பெண் அப்பிடி ஆக மாட்டா அம்மா! கவலைப்படாதீங்கோ! நானே ராஜா ராமனுக்குச் சொல்லியிருக்கேன். அவன் கோவில்லே சத்தியம் பண்ணியிருக்காட்டா, நானே திருவேடகம் கோவிலுக்கோ வார்தா ஆசிரமத்துக்கோ கூப்பிட்டுக் கொண்டு போய் நாளைக்கே ரெண்டு பேருக்கும் கலியாணம் பண்ணி வச்சுடுவேன், ' என்றார் பிருகதீஸ்வரன். அவள் குச்சி குச்சியாகத் தளர்ந்த விரல்களைக் கூப்பி அவரை வணங்கினாள். அதற்கு மேல் பேச அவளுக்குச் சக்தியில்லை. அவர் விடைபெற்றுக்கொண்டு, பத்தரோடு புறப்பட்டார். பவித்ரமான மனித இதயங்கள் எங்கெங்கோ இப்படி இருளில் இருப்பதாகத் தோன்றியது அவருக்கு. தனபாக்கியம் இத்தனை மிருதுவான சுபாவமுடைய வளாக இருப்பாளென்று அவர் எதிர்பார்க்கவே இல்லை.

அன்றிரவு ராஜாராமனையும், பிருகதீஸ்வரனையும் பத்தரையும் முத்திருளப்பனையும் தன் வீட்டுக்குச் சாப்பிடக் கூப்பிட்டனுப்பியிருந்தாள் தனபாக்கியம். இதை மங்கம்மா வந்து பத்தரிடம் சொல்லி, பத்தர் மேலே வந்து பிருகதீஸ்வரனிடம் தெரிவித்தார்.

இரவு அங்கே போனதும் பிருகதீஸ்வரன் தனபாக்கியத்திடம், 'என்ன பெரியம்மா, நிச்சயதார்த்த விருந்து வக்கிறீங்க போலிருக்கே?' என்று சிரித்துக் கொண்டே கேட்டார். தனபாக்கியமும் முகம் மலர்ந்தாள். வீடு முழுவதும் மட்டிப் பால் வாசனை கமகமத்தது. அவர்கள் எல்லோரும் போகும்போது மதுரம் தனபாக்கியத்தின் கட்டிலருகே கீழே ஜமுக்களத்தில் அமர்ந்து, வீணை வாசித்துக் கொண்டிருந்தாள்.

பிருகதீஸ்வரனோடு ராஜாராமனைப் பார்த்ததும் - பதறி எழுந்து நிற்க முயன்றவளைக் கையமர்த்தி உட்கார்ந்து