பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 ஆத்மாவின் ராகங்கள் வாசிக்கும்படி சொன்னான் அவன். அவர்களும் ஜமுக்காளத் தில் உட்கார்ந்தார்கள். மதுரத்தின் முகத்தில் மணப்பெண் னின் கவர்ச்சி பொலிந்தது. கூந்தலில் பூக்கள் மணந்தன.

'எப்போ முதல் முதலா நீ நூத்த சிட்டத்தோடு இவன் கதர்க்கடைக்குப் புடவை வாங்க வந்தானோ, அப்பவே தெரியுமே எனக்கு? - என்று முத்திருளப்பன் அவளைக் கேலி செய்தார். * -

பிரமாதமாக விருந்து சமைத்திருந்தாள் மங்கம்மாக் கிழவி. விருந்து முடிந்து - மதுரம் சிறிது நேரம் பாடினாள். விடை பெற்றுக் கொண்டு புறப்படும்போது,

'எங்களைப் போலவே பாரத தேசம் சீக்கிரமாக அந்நியர்களிடமிருந்து விடுதலை அடைஞ்சு சுதந்திரம் பெறணும்னு நீங்களும் பிரார்த்திச்சுக்குங்கோ அம்மா. அப்பத்தான் உங்க பெண்ணுக்குக் கலியாணமும் சீக்கிரம் ஆகும்' - என்று படுக்கையில் சிரமப்பட்டு எழுந்து உட்கார்ந்திருந்த தனபாக்கியத்திடம் சொல்லிவிட்டு வந்தார் பிருகதீஸ்வரன். w - - -

மறுநாள் அதிகாலையில் ராஜாராமன், பிருகதீஸ்வரன், முத்திருளப்பன் மூவரும் ஆசிரமம் அமைய இருந்த அந்த மாந்தோப்புக்குச் சென்றார்கள். பர்ண சாலைகள் மாதிரி முக்கால் அடி கனத்துக்குச் சம்பங்கோரை வேய்ந்த குடிசைகளாகக் கட்டிடங்களை அமைப்பது - எளிமையைக் காட்டுவதோடு செலவிலும் சிக்கனத்தை உண்டாக்கும் என்றார் பிருகதீஸ்வரன். ஆலமரமும் தாமரைப் பூக்குளமும் அப்படியே இருக்க வேண்டுமென்றும் கூடியவரை பச்சை மரங்களை வெட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், முடிந்தால் மரங்களை மேலே விட்டு விட்டு அடிமரம் கட்டிடத்திற்குள் தூண்போல் அப்படியே இருக்கும் படியாகவே சார்ப்பை நெருக்கிக் கூரை வேய்ந்து விட வேண்டும் என்றும் கூட அவர் அபிப்ராயப்பட்டார். ஒரு சிறு மரத்தை வெட்டுவதைக்கூட அவர் விரும்பவில்லை.