பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 ஆத்மாவின் ராகங்கள்

'சத்தியம் - தன்னைத் திருத்த உதவுவது. சேவை - பிறரைச் சுகம் காணச்செய்ய உதவுவது. இந்த இரண்டுமே காந்திய மகாவிரதங்கள். சத்தியமும், சேவையும் உள்ளங்கையும் புறங்கையும்போல் சேர்ந்திருக்க வேண்டும். உங்கள் ஆசிரமத்துக்குச் சத்திய சேவாசிரமம்' என்று பெயர் வைத்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும்' - என்றார் வைத்தியநாதய்யர். அந்தப் பெயர் அவர்களுக்கும் பிடித்திருந்தது. பெயரைச் சொல்லிவிட்டு அவர்கள் கேட்காமலே ஆசிரமத்துக்காக வைத்துக் கொள்ளும் படி ஐநூறு ரூபாய் பணமும் கொடுத்தார் வைத்தியநாதய்யர். ராஜாராமன் தயங்கினான்.

'பெரியவர் ஆசீர்வாதம் போலக் கொடுக்கிறார், வாங்கிக் கொள், என்றார் பிருகதீஸ்வரன். ராஜாராமன் வைத்தியநாதய்யரை வணங்கிவிட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டான். "தீர்க்காயுசா இருந்து நாட்டுக்குத் தொண்டு செய், என்று அவனை வாழ்த்தினார் அவர். அப்புறம் தொடர்ந்து இக்னேஷியஸ், சுப்பராமன் ஆகியோரையும் போய்ப் பார்த்தார்கள். பிருகதீஸ்வரனும் முத்திருளப்பனும் கட்டிட வேலையில் பழக்கமுள்ளவரும், கொஞ்சம் சுதேசி மனப்பான்மை உள்ளவருமான கொத்தனார் ஒருவரைத் தேடிக் கண்டுபிடிக்க முயன்றார்கள். ரத்தினவேல் பத்தர் சுண்ணாம்புக்காரத் தெருவில் இருக்கும் சுப்பையாக் கொத்தனார் என்பவரைத் தேடிக் கூப்பிட்டுக் கொண்டு வந்தார். சுப்பையாக் கொத்தனார் கதர் கட்டியிருந்தது அவர்களுக்கு நம்பிக்கையளிப்பதாய் இருந்தது. வானம் தோண்டித் தரை மட்டம் வரை கல்கட்டு, அப்புறம் செங்கல், கூரைச் சார்புடன் ஆறு, தனித் தனிக் கட்டிடங்கள், ஒரு பிரேயர் ஹால், ஆலமரத்தைச் சுற்றி வட்டமாக மேடை என்று ஒரு திட்டம் வகுக்கப்பட்டது. சில மரச் சாமான்களும், மேஜை, நாற்காலிகளும், கைராட்டினங்களும், நெசவுச் சாதனங்களும், தறிகளும், தேனி வளர்க்கும் மரக்கூடுகளும் கூடத் தேவைப்பட்டன. ஆசிரமத்தின் சிக்கனமான தேவைகளுக்கே எல்லாமாகச் சேர்த்து இருபதாயிரம் ரூபாய் வரை வேண்டியிருக்கும் போலிருந்தது. அப்போது