பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/168

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 ஆத்மாவின் ராகங்கள்

அது ஏன் அப்படிச் சொல்லனும் நீங்க? எந்தப் பெண்ணும் என்னைத் தொட முடியாதுன்னிங்களே! உங்களை என்னைத் தவிர வேறொருத்தியும் தொடக் கூடாதுன்னு நான் கதறிக் கதறிப் பாடறதைக் கேட்டும், நீங்க அப்படிச் சொல்லியிருக்கப்படாது. எத்தனை தினங்கள் என் பூக்களால் உங்களுடைய இந்த அழகிய பாதங்களை அர்ச்சித்து, பக்தியை அச்சாரம் கொடுத்திருக்கேன்டி அப்படியிருந்தும் நீங்க இது மாதிரிப் பேசலாமா? நீ அதுவரை தொட முடியாது'ன்னு மட்டும் தான் நீங்க சொல்லனும் இன்னொருத்தர் தொடறதுங்கற பிரஸ்தாபமும் கூடவே கூடாது.'

'தப்புத்தான் வாய் தவறிச் சொல்லிவிட்டேன் மதுரம், ஆனா, நீ மட்டும் 'சூடு தாங்கற சக்தி உன் கைக்கு மட்டும்தான் உண்டு என்பது போலப் பேசலாமா?"

'அதுலே என்ன தப்பு? சேவை செய்யறவங்களுக்குச் சூடு தெரியாது. பக்தி சிரத்தையோட மாரியம்மன் கோவிலில் தீ மிதிக்கிறவர்களுக்குக் கால் சுடறதில்லையே?'

'ஏதேது? உங்கிட்டப் பேசி ஜெயிக்க முடியாது போலிருக்கே?"

'இருக்கலாம்! ஆனா, உங்களை ஜெயிக்கிற நோக்கம் எனக்கு ஒரு நாளும் கிடையாது! என் தவமே உங்களுக்காக சகலத்தையும் தோற்கனும்கிறதுதான்...' -

-இப்போதும் பதில் பேச முடியாமல் மெய்சிலிர்த்துப் போய் இருந்தான் அவன். பற்று உறைந்து முகமும் நெஞ்சும் வேர்த்துக் கொட்டியது. சிரிக்காமல், அந்த வாக்கியங்களை ஒவ்வொரு வார்த்தையாக, அவள் நிதானமாய்க் கூறிய போது, அவள் கண்களில் ஈரம் பளபளப்பதை அவன் கவனித்தான். இப்படி ஒரு பிறவியைப் பலமுறை அவளுக்காகவே - அவளுடைய சேவைக்காகவே - அடைய வேண்டும் போல, அந்த வாக்கியங்களால் இந்த விநாடியில் அவனைத் தவிக்கச் செய்தாள் மதுரம். அவள் பற்றுக்