நா. பார்த்தசாரதி 15 அப்போது அதற்குமேல் அவரை வற்புறுத்த எனக்கு விருப்பமில்லை, விட்டுவிட்டேன். அதற்கு மேல் இரண்டொரு முறை அவரைப் பார்க்க ஆசிரமத்துக்குப் போயிருந்த போதும் இதைக் கேட்டுப் பழைய பதிலையே என்னால் அவரிடமிருந்து பெற முடிந்தது. ஆயினும், அவருடைய வாழ்க்கை வரலாற்றை என்றாவது எழுதும். உரிமை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்ற பெருமையிலேயே நான் திருப்தி அடைந்திருந்தேன்.
இப்போது அந்த வரலாற்றை எழுதித் திருப்தி அடைய வேண்டிய சந்தர்ப்பமும் வந்துவிட்டது. அவருடைய மரணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத வேதனையோடு இந்த ஒரு திருப்தியும் இருந்தது. உடனே மதுரைக்குப் புறப்பட ஏற்பாடு செய்ய வேண்டும். இந்த நேரத்திற்கு மேல் இரயில்கள் எதுவும் இல்லை. விடிந்ததும் பகல் எக்ஸ்பிரசில் போகலாமென்றால் அது மதுரைக்குப் போய்ச் சேரும்போதே இரவு பத்து மணி ஆகிவிடும். பெரியவருடைய இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாது. காலை விமானத்தில் மதுரை போய், அங்கிருந்து யாராவது நண்பர்களிடம் கார் கேட்டுப் போகலாமா, அல்லது மாம்பலம் போய் வீட்டிலிருந்து சொந்தக் காரிலேயே அதிகாலை நாலு மணிக்குக் கிளம்பி விடலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தேன். o
ஃபோர்மேன் ஸிடி எடிஷன் முதல் பிரதியை மேஜையில் கொண்டு வந்து பரப்பினான். ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஏர்லயன்ஸ் கம்பெனிக்கு ஃபோன் செய்யத் தொடங்கி, அது தொடர்ந்து ‘எங்கேஜ்டு ' ஆகவே இருக்கவே, எதிர்த்தாற்போல் இருக்கிற இடத்துக்கு நேரில் தான் போவோமே என்று புறப்பட்டேன். - - -
மணி மூன்று. மவுண்ட்ரோடு வெறிச்சென்றிருந்தது. கொத்த வால்சாவடிக்குப் போகும், அல்லது அங்கிருந்து வரும் இரண்டொரு கட்டை வண்டிகள் கடமுடவென்ற சப்தத்துடன் நகர்ந்து கொண்டிருந்தன. கவர்ன்மென்ட்