பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டு)

தமிழ்நாடு மாகாண காங்கிரஸ் தலைமைக்கு அந்தத் தடவை சி.பி. சுப்பையாவும், காமராஜும் போட்டி யிட்டார்கள். போட்டியில் சி.பி. சுப்பையாவுக்கு நூறு ஒட்டுக்களும் காமராஜுக்கு நூற்று மூன்று ஒட்டுக்களும் கிடைத்தன. காமராஜ் வெற்றி பெற்றார். தங்கள் பக்கத்து மனிதர் தலைமைப் பதவியை ஏற்க நேர்ந்ததில் ராஜாராமன், முத்திருளப்பன், குருசாமி எல்லாருக்கும் பெருமகிழ்ச்சி ஏற்பட்டது.

'மதுரை மாகாண மகாநாட்டில் ஏற்பட்ட கட்சி கட்டும் மனப்பான்னை ஒவ்வொரு தலைவர் தேர்தலின் போதும் பெரிசாகிக் கொண்டே வருகிறதே என்றுதான் கவலையாக இருக்கிறது. காங்கிரஸ் என்ற தேசிய மகாவிரதம் பங்கப் படக்கூடாதே என்று நான் பயப்படுகிறேன். காமராஜும் அப்பழுக்கற்ற தேசபக்தர். சி.பி. எஸ்ஸும் அப்பழுக்கற்ற தேசபக்தர். இருவரில் ஒருவரைப் போட்டியின்றித் தேர்ந்தெடுத்திருக்கலாம். காங்கிரஸ் என்ற சத்திய விரதத்தைச் சுதந்திரமடையும் முன்பு - இப்போதே தலைவர் தேர்தல்கள் எப்படி எப்படி எல்லாம் குலைக்க முயல்கின்றன பாரு! - என்று பிருகதீஸ்வரன் மட்டும் கொஞ்சம் மனங்கலங்கினார். தேர்தல் முடிந்ததுமே சி.பி. சுப்பையா பெயரைப் பிரேரே பித்திருந்த முத்துரங்க முதலியார் கமிட்டி உறுப்பினர் பதவியிலிருந்து விலகிவிட்டதாக வந்த செய்தி இன்னும் வருத்தத்தை அளிப்பதாயிருந்தது. அந்தச் சமயம் சென்னை கார்ப்பரேஷன் மேயராயிருந்த சத்தியமூர்த்திக்கு இதைப் பற்றிக் கவலை தெரிவித்து, வருத்தத்தோடு ஒரு கடிதம் எழுதினான் ராஜாராமன். அதே கடிதத்தில் பிருகதீஸ்வரனும் கையெழுத்திட்டிருந்தார். -

யுத்த நிலைமை பற்றிப் பேசுவதற்காக அந்த வருடம் காந்தி வைஸ்ராயைச் சந்தித்தார். தனிப்பட்டவர் சத்தியாக்கிரகத்துக்கு அநுமதி கிடைத்திருந்ததால், தேசத்