பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 - ஆத்மாவின் ராகங்கள் ஆரம்பிச்சாச்சு. சுப்பையாக் கொத்தனார் வானம் தோண்டிக் கட்டு வேலை தொடங்கிவிட்டார்.'

'பணம்... ??

'வசூலாகி கையிலே இருந்ததோட வேற பணமும் கொஞ்சம் கிடைச்சது...'

'கிடைச்சுதுன்னா ... எப்படி?"

'மதுரம் ஏற்பாடு பண்ணிக் கொடுத்தாள் உங்கிட்டச் சொன்னா, நீ கோவிச்சுப்பியோன்னுதான் சொல்லத் தயங்கினேன்...'

'நீங்க செய்தது எனக்குப் பிடிக்கலை சார் மாந்தோப்பை எழுதி வாங்கினோம். அதுக்கு முன்னாடியே வாசகசாலைக்கும் எங்களுக்கும், ஹரிஜன நிதி, ஆலயப் பிரவேச நிதின்னு மதுரம் நிறையச் செய்தாச்சு. இன்னமும் அவளையே சிரமப்படுத்தினா எப்படி? அது நல்லாவா இருக்கு?" * -

'இதை அவ சிரமமா எடுத்துண்டால்தானே? இது தான் என் சந்தோஷம்! நீங்க ஆசிரம வேலையைத் தொடங்குங்கோன்னு மதுரமே எங்கிட்ட வந்து கெஞ்சினா, நான் என்ன செய்ய முடியும் ராஜா?'

"இதுக்குப் பயந்துதான் நான் அவகிட்ட ஆசிரம வேலை பற்றி பணக் கஷ்டத்தைச் சொல்லாமலே வைத்திருந்தேன்."

நான் மட்டும் சொன்னேனா என்ன, ஏன் ஆசிரம வேலை நின்னிருக்கு?ன்னு மதுரமாகவே எங்கிட்ட வந்து கேட்டு உதவறபோது, வாங்கிக்காமல் வேறென்ன செய்ய முடியும்? தவிர நீ நினைக்கிற மாதிரி நாம் இனிமே மதுரத்தை அந்நியமா நினைக்க வேண்டியதில்லை என்று அபிப்ராயப்படுகிறேன் நான். நீ மட்டும் இதுக்கு ஏன் தயங்கணும்னு தான் எனக்குப் புரியலே ராஜா?"

a & 3 *