பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 177 சிபாரிசு செய்வதைக் கேட்டு உள்ளுறச் சிரிப்பாயிருந்தாலும் அவருடைய அந்தரங்கமான பாசவுணர்வு அவனை வியக்கச் செய்தது. நிஜமான அன்பு என்பது மனிதர்களை மீண்டும் மீண்டும் குழந்தை களாக்குவதை அவன் கவனித்தான். தன் சொந்த மகளைப் பற்றி அக்கறைப்படுவது போல் பத்தர் மதுரத்திடம் அக்கறை காட்டினார். ஆசிரமம் தொடங்கி நடந்து கொண்டிருந்தாலும், அவன் வாசகசாலையிலேயே தங்கி மதுரத்துக்கு ஆறுதலளிக்க வேண்டுமென்றும் அவரே கேட்டுக் கொண்டார்.

"இதை மதுரமே எங்கிட்டச் சொல்லியாச்சு." 'அது எனக்கும் எதியும் தம்பீ. ஆனா, நீங்க அந்த வேண்டுகோளைப் புரிஞ்சுக்கணும்கிறதை நானும் ஞாபகப் படுத்த ஆசைப்படறேன்...'

'சரி இந்த விஷயத்திலே மட்டும் உங்க ரெண்டு பேர் வார்த்தையையும் நான் தட்டலை, இப்பத் திருப்தி தானே உமக்கு?’’ - . .

பத்தரின் முகம் மலர்ந்தது. அன்றிரவு மதுரத்தைக் கொஞ்ச நேரம் வீணை வாசிக்கச்

சொல்லி வேண்டினான் ராஜாராமன்.

'அம்மா போனதிலிருந்து நான் வாத்தியத்தைத் தொடலே! நீங்களே ஆசைப்பட்டுக் கேட்கிறபோது நான் மாட்டேங்கப்படாது. இதோ வாசிக்கிறேன்.'

வேண்டாம்னு இருந்தர் நான் வற்புறுத்தலே மதுரம். எனக்காக அதை மாத்திக்க வேண்டாம்..."

'இல்லே! உங்களுக்கில்லாததுன்னு எதுவும் கிடையாது எங்கிட்ட. நான் இதிலே வாசிக்கறதே உங்களைத்தான். வாசிக்கிற ராகம் எல்லாமே நீங்கதான் எனக்கு..."

ஆ.ரா - 12