பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 181 ராஜாராமன் இருவருமே அவரை வேண்டினார்கள். அவர்கள் செல்லுமுன் தாமாகவே அந்த முடிவுக்கு வந்து விட்டதாகத்

தெரிவித்தார். அவர். அன்று மாலையில் ஒடக்கரையில்

உட்கார்ந்து சூரியாஸ்தமனத்தின் அழகை இரசித்துக்

கொண்டே நேரம் போவது தெரியாமல் பேசிக்

கொண்டிருந்தார்கள் அவர்கள். ஆசிரமத்தின் எதிர்காலம்,

அதன் நிதி வசதிகளைப் பெருக்குவது, அதை ஒரு காந்திய

மகாவித்யாலாயமாக மாற்றும் இலட்சியம், எல்லா வற்றையும் பற்றி அந்தரங்க சுத்தியோடு மனம் விட்டு

உரையாடினார்கள் நண்பர்கள்.

முத்திருளப்பனும், ராஜாராமனும் அன்றிரவு ஆசிரமத்திலேயே தங்கிவிட்டு, மறுநாள் காலை மதுரைக்குத் திரும்பினர். அடுத்த நாள் மீண்டும் முத்திருளப்பன் தொடர்ந்து ஆசிரமத்தில் பணிபுரிய அங்கேயே வந்துவிட வேண்டும் என்றும், வாசகசாலை, இயக்க வேலைகள் எல்லாவற்றையும் ராஜாராமனிடமும் குருசாமியிடமும் விட்டுவிட வேண்டும் என்று புறப்படும்போது பிருகதீஸ் வரன் வற்புறுத்திச் சொல்லியிருந்தார். முத்திருளப்பனும் அதற்கு மகிழ்ச்சியோடு இணங்கிவிட்டுத்தான் புறப்பட்டார். ஆனால், குருசாமிக்கும் இயக்க வேலையை விட ஆசிரமவாசமே பிடிப்பதாகத் தெரிந்தது. -

அன்று மதுரையில் ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி பரவி எல்லாரையும் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தது. சிறையில் இருந்த காமராஜ் விருதுபட்டி முனிசிபல் சேர்மனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். சிறையில் உள்ள ஒருவரையே விசுவாசத்தோடு தேர்ந்தெடுத்திருந்த காரியம் தேச பக்தர்களுக்கு உற்சாகம் அளிப்பதாயிருந்தது. ஆசிரமத்திலிருந்து திரும்பிய தினத்தன்று பகலில், மதுரத்தினிடம் நீண்ட நேரம் ஆசிரமம் அமைந்திருக்கும் பெருமைகளையே சொல்லிச் சொல்லி வியந்து கொண்டிருந்தான் ராஜாராமன். - ,