பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/186

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


184 ஆத்மாவின் ராகங்கள்

பிடிக்கவில்லை என்றால், அவள் அந்த இடத்துக்குப் போவதில்லை. மாமா செவிடு என்பதாலும் மங்கம் மாவுக்குப் பேசி முடிவு செய்யத் தெரியாது என்பதாலும் அவனை வேண்டி இந்த ஏற்பாட்டைச் செய்து கொண்டிருந்தாள் அவள். ராஜாராமனும் மறுக்காமல் அதற்கு ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது. ஒரளவு சந்தோஷத் துடனேயே அவளுக்காக அதைச் செய்தான் அவன்.

பத்தரின் இரண்டாவது பெண் கலியானத்துக்காக அவரிடம் கொடுக்கச் சொல்லி, ஒரு ஐந்நூறு ரூபாயை அவனிடம் கொடுத்தாள் மதுரம்.

"நீயே கொடேன் மதுரம் பத்தரை வரச் சொல்றேன்: என்றான் அவன்.

'அது முறையில்லே! நீங்கதான் கொடுக்கணும். நானும் வேணா கொடுக்கறப்போ உங்ககூட இருக்கேன்' என்றாள் அவள். அவள் மனம் புரிந்து சிரித்துக் கொண்டே அதற்குச் சம்மதித்தான் அவன். பத்தர் வந்து பணத்தை வாங்கிக் கொண்டு போனார். பத்தர் மகள் கலியாணத்திலும், சித்திராபெளர்ணமித் திருவிழா ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் - எல்லாவற்றிலுமாக ஒரு மாதம் கலகலப் பாயிருந்தது. அந்த மாதமும் அடுத்த முகூர்த்த நாட்கள் உள்ள மாதங்களுமாக மதுரத்துக்கு நிறையக் கச்சேரிகள் இருந்தன. எவ்வளவு பணம் வந்தாலும், வீட்டுச் செலவு, உடன் வாசிக்க வருபவர்கள் பணம் போக ஒரு பகுதியை ஆசிரமத்துக்குக் கொடுத்து வந்தாள் அவள். கடனுக்கும் வட்டி கொடுக்க வேண்டியிருந்தது. ". . . .

"தேசம் விடுதலை அடைகிறவரை பிரம்மச்சாரியாயிருக்க

ஆசைப்பட்டவனை உன்னைத் தொடாமலே நீ குடும்பஸ்தனாக்கிவிட்டாய் மதுரம்? நீ பண்ணினது உனக்கே நல்லாயிருக்கா? - என்று ஒருநாள் அவளிடம்

வேடிக்கையாகக் கேட்டான் ராஜாராமன். அவள் சிரித்தாள்.