பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/187

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 185

'உங்க சத்தியத்துக்கு நான் துணையிருக்கிறேனே தவிர அதைப் பங்கப்படுத்தணும்னு நெனைக்கக்கூட இல்லே.'

"ஆனாலும், உனக்கு நெஞ்சழுத்தம் அதிகம்..." "உங்களுக்கு மட்டும் எப்பிடியாம்?"

-இதைக் கேட்கும்போது அவள் முகம் மிக மிக அழகாயிருந்ததை ராஜாராமன் கவனித்தான். -

தினம் மாலையில் கமிட்டி அலுவலகத்துக்குப் போவது அந் நாட்களில் அவனது வழக்கமாயிருந்தது. அப்படிப் போயிருந்த ஒரு நாளில் - விருதுபட்டி காமராஜ் விடுதலையாகி வந்து, தான் சிறையிலிருந்தபோது தேர்ந்தெடுக்கப்பட்ட முனிசிபல் சேர்மன் பதவியை ஒரே ஒருநாள் வகித்தபின், ராஜிநாமா செய்துவிட்ட சமாசாரம் வந்தது. எல்லோருக்கும் வியப்பை அளித்த செய்தி யாயிருந்தது அது. பதவியை விடத் தேசபக்தி பெரிதென் றெண்ணிய அந்த மனப்பான்மையைக் கொண்டாடி, நண்பர்களிடம் சொல்லிச் சொல்லி ஆச்சரியப்பட்டான்

அவன்.

ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பத்திரண்டாம் ஆண்டின் தொடக்கத்தில், நின்று போயிருந்த 'ஹரிஜன் பத்திரிக்கையை மகாத்மா மீண்டும் தொடங்கினார். அடுத்து. டெல்லியில் ஸ்டாபோர்டு கிரிப்ஸைச் சந்தித்துப் பேசினார். வார்தாவில் கூடிய அ.இ.கா.க. கூட்டத்தில் மகாத்மாவின் வாய்மொழியாக ஜவஹர்லால் நேருவே என் வாரிசு என்ற வாக்கியம் வெளியாயிற்று. ஹரிஜன் இதழ்களில் வெள்ளையனே வெளியேறு' என்ற கருத்தைப் பல்வேறு கோணங்களிலும் வற்புறுத்தி எழுதத் தொடங்கினார் மகாத்மா. அலகாபாத்தில் அகில இந்திய காங்கிரஸ் கூடியது.