பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/188

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 ஆத்மாவின் ராகங்கள் பாகிஸ்தான் பிரிவினை பற்றி ராஜாஜி கொண்டுவந்த தீர்மானம் தோல்வியடையவே, அவர் அ.இ.கா. கமிட்டியிலிருந்து ராஜிநாமா செய்து விலகினார். காங்கிரசின் எல்லாத் தொடர்புகளையும் விட்டார். அதற்கு முன்பே காங்கிரஸிலேயே ஒரளவு தீவிரமான மனப்பான்மை உள்ளவர்கள் சுபாஷைத் தலைவராகக் கருதத் தொடங்கியிருந்தனர். 'பார்வார்டு பிளாக் உதயமாகியது. தமிழ்நாட்டில் முத்துராமலிங்கத் தேவர் அதில் சார்பு பெற்றிருந்தார். 1939-ல் சுபாஷ் மதுரை வந்திருந்த போதே இந்த அணி பிரிந்து விட்டது.

1942-ஆம் ஆண்டு ஆகஸ்டு 8ந்தேதி அபுல்கலாம் ஆசாத் தலைமையின் கீழ் அ.இ.கா.க. பம்பாயில் கூடி 'வெள்ளையனே வெளியேறு என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தின் விளைவுக்குப் பயந்த அரசாங்கம் கொடுமையான அடக்கு முறையை மேற்கொண்டது. மகாத்மா உள்பட எல்லாத் தலைவர்களும் கைது செய்யப்பட்டு எங்கெங்கோ கொண்டு போகப் பட்டார்கள். காரியக்கமிட்டி அங்கத்தினர்கள் அனைவரும் கைதாகிப் பாதுகாப்பில் வைக்கப்பட்டனர். தலைவர்கள் யார் யார் எந்த எந்த இடங்களில் பாதுகாப்பில் வைக்கப் பட்டிருந்தார்கள் என்ற செய்தியும் பொதுமக்களுக்குத் தெரியாமல் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. செய் அல்லது செத்துமடி என்ற இரகசிய அறிவிப்பு எல்லாக் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் கிடைத்திருந்தது. அஹிம்சையிலிருந்து ஆவேசத்திற்குத் திரும்பும் திருப்புமுனை இக்காலத்தில் காங்கிரசுக்கு நேர்ந்தது. யுகப் புரட்சிபோல் ஓர் போர் பிறந்தது. நாடெங்கும் சுதந்திர ஆவேசக் கனல் மூண்டது. அன்பையும், அகிம்சையையும் நம்பிய மகாத்மாவின் சாந்தக் குரலே, செய் அல்லது செத்துமடி', 'வெற்றி அல்லது இறுதிவரை போராட்டம்' என்று கனலாக மாறி ஒலித்தபோது, அந்தக் குரலின் சத்தியவேட்கையை நாடுமுழுவதும் புரிந்து கொண்டு கிளர்ந்து எழுந்தது. சர்க்காரும் பதிலுக்குக் கொதித்து எழவே