நா.பார்த்தசாரதி 17
காலையிலே சீஃப் கரஸ்பாண்டென்ட் வந்ததுமே நான் சொன்னேன்னு ஸிடி ரிப்போர்ட்டரை அனுப்பி, எல்லா வி.ஐ.பி. ஸ்ஸோட கண்டலன்ஸையும் கேட்டு வாங்கிப் போடச் சொல்லுங்கள். இப்பிடி ஒரு பெரிய மனுஷன் இனிமே தமிழ் நாட்டிலே பிறக்கப்போறதுமில்லே, சாகப் போறதுமில்லே...' என்றேன். . -
'நீங்க சொல்லணுமா? ரியலி ஹறி டிஸ்ர்வ்ஸ்...' என்று உருக்கத்தோடு பதில் வந்தது நாராயணசாமியிடமிருந்து. வாசலில் கார் வந்திருப்பதாக நைட் வாட்சுமேன் வந்து கூறவே, விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டேன். வீட்டுக்குப் போய் அவசரப் பயணத்துக்கான சிலவற்றை மட்டும் ஒரு பெட்டியில் திணித்துக் கொண்டபின், ஞாபகமாகக் கைக்காமிராவையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். - . . . . -
"முந்நூறு மைலுக்குமேலே நீங்களே ஒட்டிண்டு போயிட முடியுமா, ராமுவை வேணாக் கூட்டிண்டு போங்களேன். ரெண்டு நாள் தானே?' என்றாள். மனைவி.
காலேஜ் கெடும், அவன் வேண்டாம் ஒரு வேளை ரெண்டு நாளைக்கு.மேலேயும் ஆகலாம்' - என்று அதை மறுத்துவிட்டுக் கிளம்பினேன். . . . . *
கார் செங்கல்பட்டைக் கடக்கும் போது மெயின் ரோட்டை ஒட்டியிருந்த ஒரு கம்பத்தில் மூவர்ணக் கதர்க் கொடி அரைக் கம்பத்தில் இறக்கப்படுவதைக் கவனித்தேன். கீழே சில ஊழியர்கள் கருப்புச் சின்னமணிந்து குழுமியிருந்தனர்; அவ்வளவு அதிகாலையிலேயே செய்தி அந்த ஊருக்கு எப்படிக் கிடைத்ததென்று தெரியவில்லை.
விழுப்புரத்தில் சாலையோரமாக இருந்த ஒரு நியூஸ் ஸ்டாலில் 'தமிழ் நாட்டுக் காந்தி மறைந்தார் என்ற ஒரே செய்தியோடு ஒரு தேசியத் தமிழ் தினசரியின் வால் போஸ்டர் தொங்குவதைப் பார்த்தேன்.
ஆ.ரா - 2