பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 189 நடுக்காட்டில் இறக்கிவிட்டு, எல்லாருடைய ஆடைகளையும் அபகரித்துவிடவே மீண்டும் கொந்தளிப்பு மூண்டது. அந்த ஈனச்செயலைச் செய்த சர்க்கிள் இன்ஸ்பெக்டர் மீது அக்கினித் திராவகம் கொட்டப்பட்டது. காங்கிரஸ் இயக்கத்தைச் சேர்ந்த முக்கியமானவர்களும், தொண்டர் களும், கைதாகி விட்டதால் வெளியே இயக்கத்துக்கு ஆட்கள் இல்லாத நிலை ஏற்பட்டது. அன்றைய நிலையில் அது தவிர்க்க முடியாததாயிருந்தது. காங்கிரஸ் சோஷலிஸ்டு களாகிய ஜெயப்பிரகாஷ் நாராயணன், அச்சுதப்பட்டவர்த்தன், அருணா அஸ்ப் அலி, ராம் மனோகர் லோகியா, அசோக் மேத்தா போன்றவர்கள் மறைவாக இருந்து இந்த இருண்ட கால கட்டத்தில் இயக்கம் அழிந்து விடாமல் சுதந்திர வேள்வித் தீயைக் கணிய வைத்துக் கொண்டிருந்தனர். இவர்களைத் தவிர அப்போது சிறை செல்லாமல் வெளியே இருந்தவர்கள் ராஜாஜியும், புலாபாய் தேசாயுமே.

இதே சமயத்தில் மற்றொரு நம்பிக்கை ஒளியும் பளிச்சிட்டது. கல்கத்தாவில் பாதுகாப்புக் கைதியாயிருந்த சுபாஷ்சந்திரபோஸ், குவிட் இண்டியா இயக்கத்துக்கு முன்பே எப்போதோ எப்படியோ தப்பி ஜெர்மனிக்கும், ஜப்பானுக்கும் போய், ராஷ்பிகாரி போஸின் உதவியோடு இந்திய சுதந்திர அரசாங்கத்தை ஸ்தாபித்திருந்தார். இந்திய தேசிய ராணுவமும், ஜான்சிராணிப் படையும் அவர் தலைமையில் உருவாயின. அந்தமான், நிகோபார் தீவுகள் ஐ.என். ஏ. வசப்பட்டன. திரிபுரா காங்கிரஸில் கருத்து முறிவு ஏற்பட்டிராவிட்டால் சுபாஷ் இப்படிப் போய் ஒரு சாதனை புரிந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிராது தான். கருத்து வேற்றுமையும் கூட நல்லதாயிற்று. -

  • * k கைது செய்யப்பட்ட ராஜாராமன் முதலில் வேலூர்ச் சிறையிலே வைக்கப்பட்டிருந்தான். பின்பு அங்கிருந்து

நாகபுரி மூலம்ாக அமராவதி சிறைக்குக் கொண்டு போகப் பட்டான். அமராவதியில் மாட்டுக் கொட்டகை போன்ற ஓர்