பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/192

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


190 ஆத்மாவின் ராகங்கள் இடத்தில் அடைக்கப்பட்ட தேசபக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர். எல்லாச் சோதனைகளின் போதும் 'வந்தேமாதர கோஷமும், மகாத்மா காந்திக்கு ஜே' என்ற தாரக மந்திரமுமே அவர்களுக்குத் துணையாயிருந்தன. அமராவதிச் சிறைவாசம் கொடுமையின் எல்ல்ைகளைக் கொண்டதாயிருந்தது. கைதிகள் கடிதம் எழுதவோ, பெறவோ முடியாமல் அதிகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட்து. சுகாதார நிலையோ படுமோசமாயிருந்தது. ஜெயில் அதிகாரிகளுக்கும் வார்டன்களுக்கும் மராத்தி மட்டுமே பேசத் தெரிந்திருந்தது. சத்யாக்கிரகிகளில் பலருக்குத் தமிழும், ஆங்கிலமுமே தெரிந்திருந்தன. அதனால் பல குழப்பங்களும் நேர்ந்தன. சிறை மேலதிகாரியாயிருந்த ஸ்காட் என்ற ஆங்கிலேயன் மிகமிகக் கொடுமையாக நடந்து கொண்டான். ராஜாராமனைப் பொறுத்த வரையில் மதுரையைப் பற்றி எதுவுமே தெரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு தீவுக்கு நாடு கடத்தப்பட்டு விட்டது போல ஆகிவிட்டது நிலைமை. யாரைப் பற்றியும் எதுவும் தெரிந்து கொள்ள முடியாது போயிற்று. மழைக்காலத்தில் கடுமையான அடைமழை, வெய்யில் காலத்தில் கடுமையான வெப்பம் என்று அமராவதியின் சூழ்நிலை இருந்தது. ராஜாராமனின் உடல் நிலை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. நரக வேதனை அனுபவிப்பது போல நாட்களை ஒவ்வொன்றாக எண்ண வேண்டியிருந்தது. மதுரம் எப்படித் தவிப்பாள் என்பதை ஒவ்வொரு விநாடியும் அவன் உணர்ந்தான். ஆறுதல் கூற முடியாமல் பத்தர் தளர்ந்து ஒடுங்கிப் படுத்துவிட்டார். பிருகதீஸ்வரனும், முத்திருளப்பனும், குருசாமியும் ஆசிரம வாசிகளாகி, மாந்தோப்பிலேயே தங்கி விட்டார்கள். மதுரத்தைப் பொறுத்தவரை மதுரை நகரமே சூனியமாகிவிட்டது போலிருக்குமென்பதை அவன் புரிந்து கொள்ள முடிந்தது. அவள் நிலைமையைப் பல நூறு மைல்களுக்கு அப்பால் இருந்தே உணர்ந்தான் அவன்.

சிறையில் உடனிருந்த மற்றவர்களில் பலர் குடும்பஸ்தர்கள். அவர்கள் ஒவ்வொருவரும் எத்தனை எத்தனை குடும்பக் கவலைகளோடு மனம் வெந்து