பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/193

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 191 கொண்டிருப்பார்கள் என்று நினைத்த போது தன் கவலையை அவனால் மறந்துவிட முடிந்தது. முன்பு ஒரு முறை இதேபோல் சிறை வாசத்தின் போது மதுரத்தையே நினைத்துப் பாடிய அந்த வரிகள் ஞாபகம் வந்தன.

எல்லையிலாததோர் காட்டிடைநள்

இருளென்றும் ஒளியென்றும்

சொல்ல ஒணாததோர் மய்க்கத்தே

தான் இப்போது இருக்கும் நிலையே பாடலில் பாடியிருப்பது போல் தான் என்று தோன்றிய போது மனத்துக்குள் சிரித்துக் கொண்டான் அவன். சோகமும் தனிமையும் மனத்தை ரம்பமாய் அறுக்கும் சில பொறுக்க முடியாத வேளைகளில் எங்கிருந்தோ மங்கலாக வீணையை மீட்டும் ஒலியும் 'தெலியலேது ராமா' என்ற குரலும் காதருகே வந்து ஒலிப்பது போல் பிரமை ஏற்பட்டது அவனுக்கு. அந்தக் குரலில் பவ்யமும், பசியும், இனிமையும், அன்பும் அனுராகமும் அவன் இதயத்தையே குளிர்விப்பனவாயிருந்தன.

அமராவதி சிறையில் அவனோடு இருந்த மதுரைத் தேச பக்தர்களில் சிலர் அவனுக்குப் பின் கைதானவர்கள். அவர்கள் மதுரையிலும், நெல்லையிலும், கோயம்புத்துரிலும் நடந்த மாபெரும் போராட்ட நிகழ்ச்சிகளையும் போலீஸாரின் அடக்குமுறையையும் விவரித்துக் கதை கதையாகச் சொன்னார்கள். தந்திக் கம்பிகள் அறுத்தல், ரயில் தண்டவாளத்தைத் தகர்த்தல், பாலங்களுக்கு வெடி வைத்தல், தபாலாபீஸுக்குத் தீ என்று சுதந்திர ஆவேசத்தில் பல பெரிய பெரிய ஆத்திரமான காரியங்கள் நடந்திருப்பது தெரிந்தது. 'டு-ஆர் டை என்ற மகாத்மாவின் வாசகம் ஒரு குமுறலையே கிளப்பியிருந்ததை அவன் உணர்ந்தான். சாத்வீகத்தை நம்பியே பழகிய தலைமையும் 'வெற்றி அல்லது மரணம்' என்ற நிலைக்கு வந்துவிடும்படி நேர்ந்துவிட்ட சூழ்நிலையை அவன் சிறையில் பல நாட்கள் தொடர்ந்து சிந்தித்த வண்ணமிருந்தான். கண்ணிர்விட்டு வளர்த்த சுதந்திரப்