பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/200

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


198 ஆத்மாவின் ராகங்கள்

உடனே செம்பியன் கிணற்றுச் சந்துக்குப் போய் பத்தர் குடியிருந்த வீட்டில் தேடினான். பத்தர் குடும்பமும் இப்போது அங்கே இல்லை என்று தெரிந்தது. பத்தர் காலமானதுமே அந்தக் குடும்பத்தினர் தெற்கு மாசி வீதிப் பக்கம் மறவர் சாவடிக்கு அருகே எங்கோ குடிபோய் விட்டதாகத் தெரிவித்தார்கள். கடையை இடம் மாற்றியது போல் வீட்டையும் மாற்றியிருந்தார்கள். ஒன்றும் புரியாமல் ராஜாராமனுக்குத் தலை சுற்றியது. நேரே ஆசிரமத்துக்கே போய்விட்டால் என்னவென்று தோன்றியது. இடங்களையும் காணாமல், தெரிந்த மனிதர்கள் என்ன ஆனார்கள் என்றும் புரியாமல் மதுரையின் வீதிகளில் அநாதைபோல் சுற்றி அலைவதைவிட ஆசிரமத்துக்கே போய்விடலாம் என்று தோன்றினாலும், எதற்கும் தெர்காவணி மூல வீதியில் ஒரு தடவை சுற்றிப் பார்த்து விடவும் ஆவலாயிருந்தது. சொந்த ஊரிலேயே ஒன்றும் புரியாமல் கண்களைக் கட்டி விட்டது போல் அநாதையாக அலைவது மனத்துக்கு வேதனை யளித்தாலும், தெற்கு ஆவணி மூல வீதிக்கு மட்டும் ஒரு நடை போய்ப் பார்த்து விடுவதென்று புறப்பட்டான் அவன். ஆசிரமத்துக்குப் போய்விட்டால் மறுபடியும் இருபது மைலுக்குமேல் திரும்பவும் உடனே எடுத்துக் கூட்டி மதுரைக்கு வர முடியாது. அதனால் கையோடு கில்ட் கடையைத் தேடிப் பார்த்து விடுவதென்ற முடிவுக்கு வந்திருந்தான் அவன். தெற்காவணி மூல வீதியில் எல்லா கில்ட் கடைகளும் ஒரு சந்தில் இருந்தன. எல்லாத் தங்கம், வெள்ளி, நகைக் க்டைகளும் தெற்காவணி மூல விதியிலேயே இருந்ததால் கில்ட் தொழிலில் ஒரளவு நிறைய சம்பாதிக்க அந்த இடமே ஏற்றதாயிருக்கும் என்று பத்தருடைய காலத்துக்குப் பின் அவருடைய மகன் நினைத்து இடம் மாறியிருக்க வேண்டும் என்று தோன்றியது. : .

தெற்காவணி மூல வீதியில் நினைத்ததை விடச் சுலபமாகவே பத்தரின் மகன் கடை வைத்திருந்த இடத்தைக் கண்டு பிடித்துவிட முடிந்தது. ரத்தினவேல் பத்தர் காலத்தில் இருந்ததைவிடக் கடை இப்போது பெரிதாகியிருந்தது. நிறைய ஆட்களும் வேலை பார்த்தனர். பத்தரின் மகன்