பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/201

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி 199

ராமையாவுக்கு, இளைத்துத் தாடியும் மீசையுமாக வந்து நின்ற ராஜாராமனை முதலில் அடையாளமே புரியவில்லை.

'அப்பா காலம் ஆயிடுச்சு ராமையா! இனிமே அப்படி ஒரு நல்ல மனுஷனை நான் எந்தக் காலத்திலே பாக்கப் போறேனோ?' என்று ராஜாராமன் ஆரம்பித்த பின்பும் இவனை அவனுக்கு இனம் புரியவில்லை.

'என்னைத் தெரியலியா ராமையா நாப்பத்திரண்டு ஆகஸ்டுலே அரஸ்டாகி ஜெயிலுக்குப் போனவன் இப்பத் தான் வரேன். வாசகசாலை என்ன ஆச்சு? அப்பா இன்னும் கொஞ்சம் காலம் படுத்த படுக்கையாகவே உயிரோட இருப்பார்னு பார்த்தேனே அவருக்கு என்ன ஆச்சு?' என்று அவன் இன்னும் தெளிவாக அடையாளம் புரியும்படி சொன்ன பின் ராமையாவுக்குப் புரிந்தது.

ஆளை இனம் புரிந்ததும், 'அடடே! நம்ம ராஜாராமன் சாரா அடையாளமே புரியலையே சார் எப்படி இருந்தவர் எப்படி ஆயிட்டீங்க?' என்று முகம் மலர்ந்தான் ராமையா.

"ஜெயிலுக்குப் போறதுக்கு முன்னே நீங்க அப்பாவை வந்து பார்த்திட்டுப் போனிங்களே; அப்பவே வைத்தியர் ஒரு வாரம் கூடத் தாங்கறது கஷ்டம்னாரு. ஆனா நீங்க வந்திட்டுப் போன மூணாவது நாளே அப்பா போயிட்டாரு. நீங்க ஜெயிலுக்குப் போயிட்டீங்கங்கிற விஷயமே எனக்குப் பின்னாடித்தான் தெரியும் சார் ஆசிரமத்துக்குத் தாக்கல் சொல்லி அனுப்பிச்சேன். பிருக்தீஸ்வரன் சார், முத்திருளப்பன் ஐயா, குருசாமி எல்லாரும் உடனே வந்தாங்க. அவங்கதான் நீங்க ஜெயிலுக்குப் போயிட்ட சங்கதியையே சொன்னாங்க- மதுரம் கூட வந்திரிந்திச்சு. பாவம்! அந்தப் பொண்ணு அப்பா போனதைத் தாங்கிக்க முடியாமே கதறிக் கதறி அழுதிச்சு."

'அதுசரி ராமையா, நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதிலே சொல்லலியே வாசகசாலை என்ன ஆச்சு?