பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 201

'நீங்களும் ஜெயிலுக்குப் போயிட்டீங்க. அப்பா திடமாக நடமாடிக்கிட்டிருந்தாலும் இப்படியெல்லாம் ஆகியிருக்காது. கொஞ்ச நாள்லே அவரும் கண்ணை மூடிட்டதனாலே என்னென்னவோ நடந்து போச்சு. இப்ப நெனைக்கறதுக்கே சங்கடமாயிருக்கு. அப்பா இருந்திருந்தா இப்பிடி எல்லாம் நடந்திருக்காது. அவரும் போயிட்டார், நீங்களும் இங்கே இல்லே. பிருகதீஸ்வரன் சார், முத்திருளப்பன் ஐயா, குருசாமி டெயிலர் எல்லாரும் ஆசிரமத்தோட ஆசிரமமாத் தங்கிட்டாங்க. நீங்க ஜெயிலுக்குப் போயிட்டதனாலே மதுரம் மனசு நொந்து போய்க் கச்சேரிக்குப் போறதை ஒவ்வொண்ணா விட்டுடுச்சு. கச்சேரிக்குப் போகவும், பாடவும் அதும் மனசிலே உற்சாகமே இல்லே. பணம் வேணுமேங்கிறதுக்காகப் போன இரண்டொரு கச்சேரியும் நிரக்கலே, மனசு நிறைய வேதனை இருந்தா அந்த வேதனையோட எப்படி நல்லாப் பாட முடியும்? கச்சேரிக்குப் போகறது படிப்படியா நின்னுது. அது போதாதுன்னு அந்தக் கிழவி மங்கம் மாவும் அவ மாமனும் அப்பா போன ஆறுமாசத்துக்குள்ளே அடுத்தடுத்துச் சொல்லி வச்சாப்பல ஒவ்வொருத்தராப் போய்ச் சேர்ந்தாங்க. தனிமை அதைக் கொஞ்சம் கொஞ்சமா உருக்கிடிச்சு. எங்க வீட்டோட வந்து இருக்கச் சொல்லி நான் கெஞ்சினேன். அது கேட்கலே. ஆசிரமத்திலேயே வந்து தங்கச் சொல்லிப் பிருகதீஸ்வன் சார் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தாரு, அதையும் அது கேட்கலே. தனியா அத்தினி பெரிய வீட்டுலே ஒண்ணா நம்பர்ச் சந்திலே கிடந்து தானாகவே அங்கே அது வாடின. வேதனையை எங்களாலே தாங்க முடியலே. • '

'கச்சேரி வருமானம் இல்லாததுனாலே, வீட்டுமேலே வாங்கியிருந்த கடனுக்கு வட்டியும் கொடுக்கப்படலே, வாசகசாலைக்கும் ரெண்டு மூணு மாசமா வாடகை நின்னு போச்சு. வீட்டுக்காரன் ஏற்கெனவே ரொம்பக் கோபமாயிருந்தான். அவனுக்குக் கொஞ்சம் ஜஸ்டிஸ் பார்ட்டி அநுதாபம் உண்டு. வாடகையும் நின்றுபோகவே, வாசக சாலையைக் காலி பண்ணிட்டு வேறு வேலை பாருங்கன்னு வந்து கத்தினான். மதுரம் ஒண்னும் புரியாமே