பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 19 மதுரையிலிருந்து சேவாசிரமமுள்ள கிராமத்துக்குப் போகிற சாலையில் ஒரே கூட்டம். நடந்தும், காரிலும், ஜீப்பிலும், பஸ்களிலுமாக மனிதர்கள் மெளனமாகப் போய்க் கொண்டிருந்தார்கள். எல்லார் மார்பிலும் சட்டைமேல் கருப்புச் சின்னம், நடையில் தளர்ச்சி, முகத்தில் துயரம். துக்கமே ஊர்வலம் செல்வது போலிருந்தது. ஆசிரமத்துக்கு வெளியிலேயே காரை 'பார்க்' செய்து விட்டு மாலையும் கையுமாக உள்ளே நுழைந்த போது அங்கிருந்த சூழ் நிலைகளைப் பார்த்து எனக்கே அழுகை வந்துவிடும் போலிருந்தது. இளம் மாணவிகளும், மாணவர்களும் பெரிய ஆலமரத்தடியில் குழுமியிருந்தனர். உணர்ச்சி வசப்பட்டுச் சிலர் தேம்பித் தேம்பி அழுது கொண் டிருந்ததைக் கண்டேன். அன்பினால் மனிதர்கள் எவ்வளவு சிறு குழந்தைகளாகி விடுகிறார்கள் என்பதைப் பார்த்த போது மனம் நெகிழ்ந்தது. இத்தனை உயிருள்ளவர்களைக் கலங்க வைத்த ஒரு மரணத்தை என்னால் கற்பனை செய்திருக்கக் கூட முடியவில்லை. இந்த மரணத்துக்குக் காலனே துணிந்திருக்கக் கூடாதென்று தோன்றியது.

இரகசியமாய்ச் சிரித்துக் கொண்டே உறங்குவது போல் மலர் மாலைகளுக்கிடையே அவர் முகம் தெரிந்தது. சுற்றிலும் அசையாமல் மெளனமாய் நிற்கும் மனிதர்கள் சலனமற்றுப் போயிருந்தனர். தலைப் பக்கம் ஒருவர் கீதையும் இன்னொருவர் திருவாசகமும் வாசித்துக் கொண்டிருந் தார்கள். வணங்கினார்கள். திரும்பினார்கள். சிலரிடம் அழுகை பீறிக் கொண்டு வெடித்தது; சிலரிடம் மெல்லிய விசும்பல்கள் ஒலித்தன. ஆசிரமத்தில் அவருடைய அறையில் நுழைந்ததும் கண்ணில் படுகிறமாதிரி, சத்தியாக்கிரகம் என்பது எல்லாக் காலத்துக்கும் பொருந்திவரக்கூடிய நியதி, ஒரு சத்தியாக்கிரகிக்குத் தோல்வியே இல்லை' - என்று மகாத்மாவின் படத்துக்குக் கீழே எழுதியிருந்ததை இன்றும் காண முடிந்தது. இன்று அந்த வாக்கியத்துக்கு அர்த்தங்களின் எல்லை விரிவடைவது போல் உணர்ந்தேன் நான். மாலையணிவித்து விட்டுக் காற்பக்கமாக வணங்கியபின்