உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 ஆத்மாவின் ராகங்கள் சேர்ந்த போது மதுரம் பூஜையறையில் இருந்தாள். அந்த உடல் நிலையிலும் அவளுக்குப் பூஜை புனஸ்காரங்களில் இருந்த பற்றையும், நம்பிக்கையையும் வியந்தார்கள் அவர்கள். ஜமீன்தாரிணியும், பிருகதீஸ்வரனும் மாளிகை வாசலிலேயே பேசியபடி நின்று விட்டார்கள். ராஜாராமன் மட்டும் ஆவலை அடக்க முடியாமல் பூஜை அறை வாசலுக்கே போய்விட்டான். காலையில் இன்னும் நீராட வில்லையாதலால் பூஜையறை உள்ளே போகாமல் வெளியிலேயே கதவருகே நின்றுவிட்டான் அவன். உள்ளே இருந்த மதுரம் வீணை வாசித்தபடி பூசை செய்து கொண்டிருந்தாள். அங்கே அமர்ந்திருந்த உருவம்தான் மதுரம் என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. அவன் கண்கள் ஈரமாயின; விழிகளில் நீர் பெருகிறது. அப்போதும் அவள் அதே 'தெலியலேது ராமா' வைத்தான் வாசித்துக் கொண்டிருந்தாள். வீணை வாசிப்பதை நிறுத்திவிட்டு, அவள் குச்சி குச்சியாக இளைத்திருந்த தன் கைகளால் ரோஜாப்பூக்களை அள்ளி அர்ச்சித்த போது அவற்றில் எவை ரோஜாப் பூக்கள், எவை கைகள் என்று கண்டுபிடிக்க அவன் கண்களால் முடியவில்லை. கைகள் இளைத்திருந்தாலும் ரோஜாப்பூக்களை அவள் அள்ளிய போதும் உள்ளங் கைகளுக்கும் ரோஜாப்பூக்களுக்கும் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாமலிருந்தது. அவள் கண்கள் இன்னும் அவன் பக்கமாகத் திரும்பவில்லை. ஒருக்களித்து உட்கார்ந்திருந்தாலும், கண்கள் தியானிப்பதைப்போல் மூடியிருந்தாலும் அவன் வந்து நின்றதை அவள் இன்னும் கவனிக்கவில்லை போலிருந்தது.

ஒரு வேளை அவனைப் பார்ப்பதற்குத் தவித்தே அவள் தெய்வங்களை அப்படிப் பூஜித்துக் கொண்டிருக்கிறாளோ என்னவோ? அவள் இளைத்து உருகிக் குச்சி போல் ஆகியிருந்த சோகக் கோலத்தைக் கண்டு மறுகித் திகைத்து நின்றான் ராஜாராமன். பூஜையறைக்கு வெளியே சுவரில் மதுரத்தின் தாய் தனபாக்கியம், நாகமங்கலம் ஜமீன்தார் படங்கள், அவளுடைய மதுரை வீட்டில் மாட்டப்பட்டிருந்த