உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 ஆத்மாவின் ராகங்கள்

'தெய்வமே' என்று அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்து அவள் விளித்த குரல் கிணற்றுக்குள்ளிருந்து வருவது போல் ஒடுங்கித் தளர்ந்திருந்தது. தொடர்ந்து அவள் நாலைந்து முறை மூச்சு இழுக்க இழுக்க இருமினாள். அவளுடைய உடல் தள்ளாடியது. அவள் தள்ளாடித் தள்ளாடி நடந்து போய்க் கோழையைத் துப்புவதற்காகப் பேஸினை எடுத்துக் கொள்ளக் குனிந்தபோது, அவன் ஒடிப்போய் பேஸினை எடுத்துப் பிடித்தான். குனிந்ததன் காரணமாக மேலும் இருமல் குத்திக் கொண்டு வந்தது. மறுபடியும் கோழையைத் துப்பினாள் அவள். கடைசியாக அவள் துப்பிய கோழை யோடு ஒரு துளி ரத்தமும் கலந்து சிவப்பாகக் குழம்பியிருந்தது. அதைக் கண்டு ராஜாராமன் இதயம் துடித்தது, பேஸினைக் கீழே வைத்துவிட்டுக் கட்டிலருகே இருந்த பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு அவளைப் படுத்துக் கொள்ளுமாறு கையால் சைகை செய்தான் அவன். எவ்வளவோ அடக்கியும் முடியாமல் அவன் கண்களிலிருந்து மாலை மாலையாகக் கண்ணிர் வடிந்தது. வாழ்நாளிலேயே இப்படி அவன் மனம் விட்டு அழுதது இதற்கு முன் சில முறை நேர்ந்திருந்தது. தமது தள்ளாத வயதையும் பொருட் படுத்தாமல் மகாத்மா உப்புச் சத்தியாக் கிரகத்தின்போது இருநூற்று நாற்பது மைல்களுக்கு நடந்தே தண்டியாத்திரை மேற்கொண்டிருந்தார் என்ற செய்தியை அறிந்த தினத்தன்று அவ்ன் சிறுகுழந்தை போல் அழுதிருந்தான்! அதற்குப் பின் சத்தியமூர்த்தி, மகாதேவ தேசாய், கஸ்தூரிபாய் காந்தி ஆகியவர்களின் மரணத்தைக் கேள்விப்பட்டபோது அமராவதிச் சிறையில் முரட்டுச் சுவர்களை வெறித்துப் பார்த்தபடி கண்ணிர் சிந்தியிருந்தான். வேலூர் சிறையில் தாயின் மரணம் அறிவிக்கப்பட்டபோது அழுதிருந்தான்.

இன்றோ அவன் மனம் சொல்ல முடியாத துயரத்தால் துடித்தது. கண்களில் நீரும், மனத்தில் ரத்தமும் வடிவது போலிருந்தது. அவள் கண்களோ அவனையே பார்த்தபடி இருந்தது. சாய்ந்தாற்போல் படுக்கையிலே அவன் பக்கமாக ஒருக்களித்துப் படுத்திருந்தாள் அவள். அவளுடைய