உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 215 பெற்றிருந்தாள். அவள் வாசிக்கும் ராகங்களைப் போலவே அதுவும் ஓர் சுகமான ராகமாக அவனுக்குத் தோன்றியது.

சிறிது நேரத்தில் பிருகதீஸ்வரனும் ராஜாராமனும் பக்கத்தில் மலையடிவாரத்தில் இருந்த ஓர் அருவிக்குப் போய்க் குளித்துவிட்டு வந்தார்கள். பிருகதீஸ்வரன் சட்டையே போடுவதில்லை. ஒரு நாலு முழம் கதர் வேட்டியும் துண்டும்தான். அருவிக் கரையிலேயே அவற்றை உலர்த்தி உடுத்திக் கொண்டு விட்டார் அவர். நீண்ட நேரம் அருவியில் துளைத்துத் துளைத்து நீராடிய ராஜாராமன், வேறு துணிமணிகள் கைவசம் இல்லை யென்பதையும் மறந்து நனைந்த துணிகளை உலர்த்தாமல் ஈரத்தைக் கட்டிக் கொண்டே வீடு திரும்பினான். நடந்து வந்த வழியில் மழை மப்பான மந்த வெளியில் அந்தக் கதர்த் துணிகள் கொஞ்சமும் உலரவில்லை. அவர்கள் வீடு திரும்பியபோது ஜமீன்தாரிணி சமையற்கட்டிலிருந்தாள். பிருகதீஸ்வரன் பூஜையறையில் நுழைந்துவிட்டார். மதுரம் ராஜாராமனை ஜாடை செய்து கட்டிலருகே கூப்பிட்டாள். அவன் போய் நின்றான். 'ஈர வேஷ்டியோட நிற்கிறீங்களே? உடம்பு என்னத்துக்கு ஆகும்? வேற வேஷ்டி இல்லையா?"

தான் ஈர வேஷ்டியோடிருப்பது அவனுக்கே அப்போது தான் நினைவு வந்தது. அவள் எழுந்திருக்க முயன்றாள். அவன் தடுத்தான். - -

'பரவாயில்லே...' என்று அவள் மீண்டும் எழுந்திருக்க முயன்றபோதும் அவன் தடுத்தான்.

"என்ன செய்யனும்னு சொல்லு மதுரம் நானே செய்யறேன். நீ எழுந்திருக்க வேண்டாம்.'

நான் உங்களை வேலை வாங்கப்படாதுன்னு பார்த்தேன். நீங்க விட மாட்டீங்க போலேருக்கு...'

'என்னன்னு சொல்லேன்... நான் செய்யறேன்..."