உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 217

'என்னப்பா, வேஷ்டி புது மாப்பிள்ளை மாதிரி மணக்கிறது?" என்று அவர் அவனைக் கேலி செய்தார். ஒரு விருந்துச் சாப்பாடே தயாரித்திருந்தாள் ஜமீன்தாரிணி அம்மாள். சமையலுக்கு ஆளும், உதவியாளும் இருந்தும் கூட அவர்களுக்கு அந்தம்மாளே பரிமாறினாள். வடை, அப்பளம் எல்லாம் இரண்டிரண்டாக இலையில் விழவே

'இதென்ன சம்பந்தி உபசாரம் போல எல்லாம் ரெண்டு ரெண்டாப் போடlங்களே! நான் ரொம்ப அல்ப ஆகாரக்காரன். ராஜாராமனுக்கு வேனுமானா நாலு நாலாப் போடுங்கோ, தாங்கும் அமராவதி ஜெயில்லே காய்ந்து போய் வந்திருக்கான்' என்று சிரித்துக் கொண்டே கூறினார் பிருகதீஸ்வரன். அந்த அம்மாளும் விடவில்லை. உடனே அதற்குப் பொருத்தமாகப் பதில் சொன்னாள்

'சம்பந்தி உபசாரம் னே வச்சுக்குங்களேன். அவர் இன்னிக்கு இல்லேன்னாலும் நாளைக்கு எப்பவாவது ஒரு நாள் இந்த வீட்டு மாப்பிள்ளையாகப் போறவர். நீங்களோ அவருக்குத் தமையன் ஸ்தானத்திலே இருக்கிறவர். குறைச்சலாப் பரிமாறி மிச்சம் பிடிச்சேன்னா, நீங்களே மாமியார் பொல்லாதவள்னு நாளைக்கு என்னைக் குறை சொல்ல மாட்டேளா?"

'கேட்டுக்கோ ராஜா உனக்குத்தான் சொல்றாங்க...' என்று ராஜாராமனைப் பார்த்துச் சிரித்தார் பிருகதீஸ்வரன். ராஜாராமன் பதிலே சொல்லவில்லை. வெட்கப்பட்டுக் கூசியவன் போல் குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டு முடித்தான். - -

அன்று பிற்பகலில் தாங்கள் வந்த இரட்டை மாட்டு வண்டியிலேயே, எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு ஆசிரமத்துக்குத் திரும்பி விட்டார் பிருகதீஸ்வரன்.

‘'நீ கொஞ்ச நாளைக்கு இங்கே இருந்து வரலாம். மதுரத்துக்கு உடம்பு தேறணும். நான் போகாட்டா ஆசிரம