பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 ஆத்மாவின் ராகங்கள்

ஒதுங்கி நின்ற என் காதருகே, 'மறுபடி சந்திக்க முடியாத புண்ணிய புருஷர்களை நாம் ஒவ்வொருவராக இழந்து கொண்டிருக்கிறோம்' - என்று துயரத்தோடு மெல்லிய குரலில் கூறினார் ஒரு பிரமுகர். மந்திரிகள், பிரமுகர்கள், தேசபக்தர்கள், கல்வி நிபுணர்கள் எல்லோரும் ஒவ்வொருவராக வந்து மாலையணிவித்து விட்டுக் குனிந்த தலை நிமிராமல் நின்றார்கள். தயங்கித் தயங்கி நான் சில புகைப்படங்கள் எடுத்தேன். - - -

மாலை ஐந்து மணிக்கு ஆசிரமத்தின் ஒரு கோடியிலேயே தகனக்கிரியை நடந்தது. அவர் ரொம்ப நாளாக விரும்பிச் சொல்லிக் கொண்டிருந்தபடி ஆசிரமத்தில் கடைசியாகச் சேர்ந்திருந்த அநாதைச் சிறுவன் ஒருவன் தான் அவருக்குக் கொள்ளியிட்டான். இரங்கல் கூட்டம் ஒன்றும் நடந்தது. ஆலமரக் காற்றோடும், ஈமத் தீயின் சந்தனப் புகையோடும் மெல்லிய சோக இழைகளாக ரகுபதிராகவ கீதமும் 'வைஷ்ணவ ஜன தோவும் ஒலித்தன. ஆசிரமப் பெண்கள் பாடினார்கள்.

ஒரு சகாப்தம் அங்கே அன்றைய சூரியாஸ்தமனத்தோடு முடிந்து போயிற்று. பெரியவரின் அந்தரங்கக் காரியதரிசி நாராயணராவைச் சந்தித்துப் பெரியவரின் டைரிகளைக் கேட்க எண்ணியும் அன்றிரவு அது சாத்தியமாயில்லை. மறுநாள் காலையிலும் சாத்தியமாயில்லை. பிற்பகல் நாராயணராவைச் சந்திக்க முடிந்தது. - . . .

'பெரியவர் பலதடவை சொல்லியிருப்பது ஞாபகமிருக் கிறது. நேற்று முன் தினம் மாலை வரையில் கூட அவர் டைரி எழுதியிருக்கிறார். நிதானமாக எல்லாம் தேடி எடுத்துத் தருகிறேன். இரண்டு நாள் தங்கிப் போகும்படி வைத்துக் கொள்ளுங்கள். அந்த மகா புருஷனின் வரலாறு வரவேண்டுமென்பதில் உங்களை விட எனக்கு ஆசை அதிகம்' - என்றார் நாராயணராவ். நான் அவருடைய விருப்பப்படியே இரண்டொரு நாள் சேவாசிரம கிராமத்தில் தங்க முடிவு செய்தேன். பெரியவரிடம் அவர் இருந்த போது