உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 219

'இருந்தா என்ன? சாமியார்னே வச்சுக்கயேன். தேசத்துக்காக என்னைப்போல இப்படி எத்தின்ரியோ பேர் சாமியாராயிருக்கோம்!...'

"அது சரிதான் நான் ஒருத்தி இருக்கேனே இன்னும்!" 'இருந்தா...?'

நான் ஒருத்தி இருக்கறவரை நீங்க சாமியாராக முடியாது... அதற்கு விடவும் மாட்டேன்...'

சொல்லிவிட்டு அவனை நேருக்கு நேர் பார்க்க நாணிக் கீழே பார்த்தாள் அவள்.

'இப்ப நீ என்ன சொல்றே மதுரம்? நான் தாடி மீசையை எடுத்தே ஆகணுமாக்கும்!"

'எனக்கு உங்க பழைய முகத்தைப் பார்க்கணும் போல

இருக்கு... $ 3

'எனக்கும்கூட உன் பழைய முகத்தையும், பழைய விழிகளையும், பழைய இதழ்களின் கணிவையும் பார்க்கணும் போல இருக்கு அதுக்கு நான் இப்ப என்ன செய்யறது?' என்று கேட்பதற்கு நினைத்து, அதைக் கேட்பதால் அவள் மனம் புண்படும் என்ற பயத்தில் கேட்காமலேயே இருந்தான் அவன். என்றாலும் அவள் விருப்பத்தையும் அவன் நிறைவேற்றினான். மறுநாள் காலை தாடி மீசையை எடுத்துவிட்டு, அவன் அவள் முன்போய் நின்றபோது, அவள் கண்கள் மலர்ச்சியோடு அவனைப் பார்த்தன. இதழ்கள் புன்னகை பூத்தன. ... --

'இப்பத்தான் பழைய மாதிரி இருக்கீங்க முகத்திலே பழைய ராஜ களை வந்திருக்கு...' - . . .

"நம்ம நிேவாஸ்வரதன் சுபாஷ் சந்திரபோஸ் மாதிரி இருக்கேன்னு அடிக்கடி கேலி பண்ணுவார். மதுரம்."