நா. பார்த்தசாரதி 227 எண்ணியது. அவள் பேசியிருந்த பேச்சுக்கள் ஒவ்வொன்றாக நினைவு வந்து அவன் நெஞ்சை அலைக்கழித்தன.
நான் ஒருத்தி இருக்கிறவரை நீங்க சாமியாராக முடியாது... அதற்கு விடவும் மாட்டேன்." -
ஆம் இப்போது அவள் இனிமேல் அவனைச் சந்நியாசியாக்கி விட்டாள். தாம்பத்தியத்தின் நளினங்களுக்குச் சாட்சியாக இருந்தவள் போனபின் இனி அவன் யாருக்காகவும் அந்த ஆசையை வைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லைதான். ஒரு வருடைய அன்புக்குக் காரணமான சாட்சி அழியும்போது, மனிதன் சந்நியாசியாகிறான். சந்நியாசியான பின்போ உலகமே அன்பு மயமாகத் தெரிய் ஆரம்பிக்கிறது. அன்பின் எல்லைகள் விரிவடைகின்றன. . . . . . . .
அவளுடைய மரணத்தை அவனால் நம்பவே முடியவில்லை. சுற்றிச் சுற்றி அவளுடைய முகமும், புன்னகையுமே அவன் கண்களில் நின்றன. அந்த சங்கீதக் குரல் அவன் செவிகளில் இடைவிடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது. மதுரம் என்ற பதத்திற்கு இனிமை என்று பொருள். அவள் இருந்த வரை அவனுடைய உலகம் இனிமையாயிருந்தது. அவள் போன பின்போ அவனுடைய உலகம் கசப்பு மயமாகி விட்டது. - --
'நீ கொடுத்து வச்சது அவ்வளவுதான் அழுது என்ன பிரயோசனம் இனிமே?' என்றார் பிருகதீஸ்வரன். நான்கு நாள் வரை மதுரத்தைப் பறிகொடுத்த அந்த மலையடி வாரத்து வீட்டில் இருப்பதே வேதனையாயிருந்தது. அவன் பைத்தியம் ப்ோலானான், வேளா வேளைக்குச் சாப்பிட வில்லை. அன்ன ஆகாரமின்றி அவன் பட்ட அவஸ்தையைப் பார்த்து பிருகதீஸ்வரன் இடம் மாறினால் அவன் கொஞ்சம்