228 ஆத்மாவின் ராகங்கள் ஆறுதல் பெற முடியுமென்று நினைத்தார். முத்திருளப்பனும் அப்படியே அபிப்பிராயப்படவே இருவருமாக ராஜாராமனை ஆசிரமத்துக்கு அழைத்துக் கொண்டு போக முடிவு செய்தனர். - :
ஆசிரமத்துக்குப் புறப்படுமுன் கடைசியாக அவள் தன் கைகளில் கொடுத்த அந்த வீணையையும் தன்னோடு எடுத்துக் கொண்டான் ராஜாராமன். அவர்கள் எல்லாரும் புறப்பட்ட போது ஜமீன்தாரிணி மனசு பொறுக்காமல் வாய்விட்டுக் கதறி அழுதே விட்டாள்.
'நீங்க எல்லாம் நல்லதா நெனைச்சு, நல்லபடி செஞ்சும், பகவான் வேற மாதிரி நினைச்சுட்டான். நாம என்ன செய்ய முடியும் ? நம்ம கையிலே எதுவும் இல்லே. தேசத்துக்குச் சுதந்திரம் வந்ததும், அவா ரெண்டு பேருக்கும் நானே கூட இருந்து கலியாணத்தைப் பண்ணி வைக்கிறேன்று மதுரத்தோட அம்மாவுக்கு வாக்குக் கொடுத்தேன். தெய்வ சித்தம் வேறுமாதிரி இருக்கும் போலத் தெரியறது - என்று பிருகதீஸ்வரனும் கண் கலங்கினார்.
ஆசிரமத்தில் ஓடையின் கரை ஓரமாக பிருகதீஸ்வரன், தான் தங்கியிருந்த ஒரு குடிசையில் ராஜாராமனையும் தன்னோடு தங்கச் செய்து கொண்டார். . . . . , *
- . . . . . . . . ★ ★。
இதற்கிடையில் தேசத்திலும், தமிழ்நாட்டிலும் எவ்வளவோ மாறுதல்கள் நடந்தன. தமிழ்நாட்டுத் தேச பக்தர்களிடையே திருப்பரங்குன்றம் மகாநாட்டில், திருச்செங்கோடு தேர்தல் செல்லாதென்று தீர்மானம் நிறைவேற்றியதோடு, 'பார்லிமெண்டரி போர்டு அமைக்கும் அதிகாரத்தைக் காரியக் கமிட்டியிடம் கொடுக்க வேண்டும்: என்ற தீர்மானமும் நிறைவேறியிருந்தது. பார்லிமெண்டரி போர்டு அமைக்கும் வேலையைக் காரியக் கமிட்டியிடம் விடக்கூடாது என்று இன்னொரு கோஷ்டியினர்