பக்கம்:ஆத்மாவின் ராகங்கள்.pdf/235

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நா. பார்த்தசாரதி - - 233 ராஜாராமனிடம் கூறினார் மகாத்மா. அவன் அப்படியே

செய்வதாகப் பாபுஜியிடம் வாக்களித்தான். ஆசிரமத்தின்

பெயர் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக அவர்

பாராட்டினார். - - ,

'கதர் மூலம் பல கோடி மக்களின் உடைத் தேவை நிறைவேறாது என்று விவரம் தெரிந்தவர்கள் கூட நினைப்பதுதான் வருத்தத்தை அளிக்கிறது. இந்தியா ஏராளமான கிராமங்களும், விவசாயிகளும் நிறைந்த நாடு. கிராமங்கள் அழிந்தால் இந்தியாவே அழிந்துவிடும். கிராமங்களையும் நகரங்களையும் இணைக்கும் ஏற்பாடுதான் கதர். இதைப் பலர் புரிந்து கொள்ளவில்லை. கதர் ஓர் புனிதமான தேசிய விரதத்தின் சின்னம். நான் சொல்லும் ஏனைய இலட்சியங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் க்தர் அணிவதால் மட்டும் பயனில்லை. அவர்கள் கதரையும், என் இலட்சியங்களையும் சேர்த்தே எரித்து விடலாம் - என்று வருத்தப்பட்டார் மகாத்மா.

'சத்தியத்தின் நம்பிக்கை இல்லாதவன், அகிம்சையில் நம்பிக்கை இல்லாதவன், சுயநலத்தைவிட மனமில்லாதவன், பிறர்க்குத் தீங்கு நினைப்பவன், கதர் அணிவதில் அர்த்தமே இல்லை! உங்கள் ஊர் ஆலயம் ஹரிஜனங்களுக்குத் திறக்கப்பட்டது என்று அறிந்த பின்பே நான் மகிழ்ச்சியோடு இங்கே தரிசிக்க வந்தேன், ஹரிஜனங்களுக்கும் ஏழைகளுக்கும். நன்மை உண்டாக்கப் பாடுபட வேண்டும். மதுவிலக்கும், கதரும், கிராமப் புனருத்தாரணமும் எந்த சத்தியாகிரகிக்கு இலட்சியங்களாகவும் விரதங்களாகவும் ஆகியிருக்கின்றனவோ அவனே கதர் அணிய யோக்யதை உள்ளவன்.' -

ராஜாராமனுக்கு கங்கையில் மூழ்கி எழுந்ததுபோல் மகாத்மாவைச் சந்தித்து அவர் உரைகளைக் கேட்ட அநுபவம் மெய்சிலிர்க்கச் செய்வதாயிருந்தது. அந்தப் பொக்கை வாய்க் கிழவரின் புன்முறுவலிலும், ஆசியிலும் சகல துக்கங் களையும் மறக்க முடிந்தது. தங்கள் காலத்தின் மகா